dinamalar telegram
Advertisement

மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் உடல்கள்

Share
பன்னா : பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் மிதப்பது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின் நந்தன்பூர் கிராமத்தின் ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் வீசப்படுவதாக, அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:இரு மாநிலங்களின் எல்லையில் செல்லும் ஆற்றில், உத்தர பிரதேசத்தில் இறந்தவர்களின் உடல்களை வீசி உள்ளனர்.இந்த ஆற்றில் இதுவரை, ஆறு உடல்கள் வரை மிதந்து சென்றுள்ளன. அவை, கொரோனா பாதிப்பால் பலியானோர் உடல்களாக இருக்கலாம் என்பதால், கிராமத்தில் தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டு உள்ளது.


இந்த பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தின் குழாய்களில் தண்ணீர் கிடைக்காதபோது, ஆற்று நீரைத் தான் குடிக்க பயன்படுத்துகிறோம். இதனால், எங்கள் கிராமத்திலும் கொரோனா பரவும் என, அச்சம் எழுகிறது.இதுபோல் ஆற்றில் உடல்களை வீசுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சமீபத்தில், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில், கங்கை நதியிலிருந்து, 70க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் உடல்கள் மிதப்பது, அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (27)

  • IndiaTamilan Kumar(Nallathai Ninaippom Nallathey Nadakkum ) - chennai,இந்தியா

    சம்மந்த பட்ட மாநில அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறது ???,

  • மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா

    KUMBA மேல வினால் வந்த அச்சே தின் இது , பாவம் கடவுள் பெயரால் வரவழைத்து இந்த பரிதாபம் ஏற்படுத்திய பாவிகள்

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    ராணு வீரர்களுடன் போஸ் கொடுத்த ஐயா, இப்ப காணோமே.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    ஜெய் ஹீராம்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    கொரோனாவை கவனம் செலுத்தாமல் தேர்தலை தள்ள போடாமல் கொரோனா பரவிவிட்டது

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      மூர்கன்.

Advertisement