dinamalar telegram
Advertisement

ஊரடங்கு, உச்சகட்ட மீறல்! வாகன அணிவகுப்பு குறையவில்லை .... தட்டிக் கழித்தால் கொரோனா கைமீறும்

Share
Tamil News
திருப்பூர் : ஊரடங்கை மீறி, சாலையில் மக்கள் நடமாட்டம் தொடர்வதால், திருப்பூரில் தொற்றின் தொடர்பு சங்கிலி அறுபடு வது கடினமாக உள்ளது.


தொற்றுக்கான தொடர்பு சங்கிலியை முழுமையாக அறுக்க வேண்டும். இதற்கு, மக்கள், வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டும்.திருப்பூரில், கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. நுாறு, இருநுாறு பேர் என, தினமும் இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது, 700ஐயும் தாண்டுகிறது. திருப்பூரில், ஆக்சிஜன் படுக்கை மையங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம். தற்போதே மருத்துவமனைகள் நிரம்ப துவங்கியுள்ளன.படுக்கை கிடைக்காது திருப்பூர் மாநகராட்சி அதிகாரி ஒருவர், கோவை மருத்துவமனைக்கு சென்று படுக்கை கிடைக்காமல், திரும்பி வந்ததோடு, உயிரையும் இழக்க நேர்ந்திருக்கிறது.தொற்று எண்ணிக்கை அபரிமிதமாக உயரும்போது, இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகரிக்கும்.ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள், சிகிச்சை பெறுவதும், அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதும் சிக்கலானதாக மாறலாம்.முழு ஊரடங்கு அமலாக்கியுள்ள போதும், திருப்பூரில், மக்கள் முழுமையாக கடைபிடிப்பதில்லை. பனியன் ஏற்றுமதி மற்றும் சார் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் பலர், வாகனங்களில் தாராளமாக சென்று வரும் நிலைதான் இருக்கிறது.போலீசாரால் தடுக்கப்பட்டாலும், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இல்லாததால், பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்குள் இல்லை. வரும் 15ம் தேதி முதல், ஏற்றுமதி நிறுவனங்களும் இயங்காது.

சங்கிலி அறுபடணும் : தொற்றின் தொடர்பு சங்கிலியை துண்டிக்கத்தான் இந்த ஊரடங்கு. ஊரடங்கின் முதல் நாளில், திருப்பூரில் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்தபோதும், போலீசார், வாகனங்களை தடுக்கவில்லை. அடுத்த நாள், பயம் விட்டுப்போன மக்கள் பலர், சாலைகளில் தாராளமாக நடமாடினர்; வாகனங்கள் இயங்கின.தற்போது போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை துவங்கியபோதிலும், அவர்களை ஏமாற்றிவிட்டு செல்லத்தான் பலர் ஆர்வத்துடன் உள்ளனர். ஊரடங்கு அமலை, சாலையில் செல்லும் மக்கள் கேலிக்கூத்தாக மாற்றியிருக்கின்றனர்.

மக்கள் நலன்கருதிதான் வாகனங்கள் பறிமுதல் கிடையாது என்று போலீசாருக்கு அறிவுறுத் தப்பட்டது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ரோட்டில் வாகனத்தில் மக்கள் விரைகின்றனர்.வழக்கம்போல் இயக்கம்சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஊரடங்கை மீறினால், அவரவர் வீட்டுக்குத்தான் முதலில் தொற்று வரும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். சில பகுதிகளை தவிர பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல் உள்ளது.தேவையில்லாமல், வெளியில் சுற்றக்கூடாது. மற்றவர்கள் உயிருடன் விளையாட, நமக்கு உரிமை இல்லை.

சிகிச்சை தேவையாக உள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனில், உடனடியாக ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க துவங்க வேண்டும். போலீசார் மற்றும் அரசுத்துறையினருக்கு பயந்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், உணர்வுப்பூர்வமாக, விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். ஊரடங்கை உச்சகட்டமாக மீறக்கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அரசு எந்த தடையும் செய்யாமல் அனைத்து மருத்துவ மனைகளையும் ஒருமாதம் மூடி மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஓய்வு அளிக்கலாம்.

  • மனுநீதி -

    திருந்தாதவரை திருத்தத்தான் அரசும், காவல்துறையும் உள்ளது. இரண்டும் திமுகவுக்கு மக்கள் ஓட்டுப்போட்டார்கள் என்று சாமரம் வீசினால் நோய் என்று ஒழியும்?

  • Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா

    மக்கள் திருந்தாமல், மாக்களாக இருந்தால், உயிர் இழப்பு தவிர்க்க முடியாது, வருந்தலாம், வேறு எதுவும் செய்ய முடியாதது.

Advertisement