dinamalar telegram
Advertisement

எல்லாம் சரியாப்போகும்! கடந்தாண்டு ஆசிரியர்கள் தைரியம்...இந்தாண்டும் திட்டத்தை தொடரணும்!

Share
Tamil News
கோவை : வீட்டிலேயே தனிமைப்படுத்தியவர்கள், கட்டுப்பாட்டை மீறி, வெளியே வருகிறார்களா என்பதை கண்காணிக்க, ஆசிரியர்கள் மூலம் 'வாட்ஸ்ஆப்' அழைப்பு மூலம் நலம் விசாரிக்கும் திட்டத்தை, இந்தாண்டு மீண்டும் செயல்படுத்த வேண்டும்.


கோவை மாநகராட்சி பகுதியில், 750க்கும் மேற்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்கள், 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.ஆனால், 'இரண்டு நாளா 'வாக்கிங்' போகலை' என கூறிக் கொண்டு, வளர்ப்பு நாயுடன், வெளியே, ஜாலி 'வாக்' செல்கின்றனர். அவர்களால், மற்றவர்களுக்கு தொற்று பரவும் என்கிற எண்ணம் இல்லாமல், அலட்சியமாக செயல்படுகின்றனர்.வாட்ஸ்ஆப்பில் விசாரிப்புகொரோனா முதல் அலை பரவியபோது, வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்களை கண்காணிக்க, மாநகராட்சி ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ்ஆப்' அழைப்பில் நலம் விசாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

'வாட்ஸ்ஆப்' அழைப்பில் நோயாளிகளுடன் பேசிய ஆசிரியர்கள், தன்னம்பிக்கையான வார்த்தைகளை கூறி, தைரியமூட்டினார். அவர்கள் மத்தியில் அச்சத்தை போக்கியதோடு, வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தினர்.தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதால், தனிமைப்படுத்தி இருப்பவர்களை, மாநகராட்சி ஊழியர்களால் கண்காணிக்க முடிவதில்லை. பறக்கும் படையினர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.அதனால், 'வாட்ஸ்ஆப்' அழைப்பில், நலம் விசாரிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால், வீட்டில் தனிமைப்படுத்தியவர்கள், வெளியே வராமல் தடுக்க முடியும்.


கடந்தாண்டை விட, இந்தாண்டுதான், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையும் அதிகம். நோயாளிகள் மத்தியில் காணப்படும் பீதியை போக்கியாக வேண்டும்.ஆகவே, உடனடியாக இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement