dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

Share
வாஷிங்டன்:கொரோனா தடுப்பூசிக்கு, அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்காவின் முயற்சிக்கு, அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

'கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை பெறும் அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, உலக வர்த்தக அமைப்பில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.உலக வர்த்தக அமைப்பின் கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இதில், இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

'இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்காவின் முயற்சிகளை வரவேற்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில், உலகம் முழுதும் உள்ளவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் இந்த முயற்சிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்' என, அமெரிக்க வர்த்தக பிரிதிநிதி கேத்தரின் டாய் கூறியுள்ளார்.இதன் வாயிலாக தடுப்பூசிகள் தயாரிப்பு அதிகரித்து, ஏழை நாடுகளிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்து, அமெரிக்க எம்.பி.,க்கள் பலரிடம் சமீபத்தில் பேசினார். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜோ பைடன் இந்த முடிவு எடுத்துள்ளதற்கு, பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதால், இது தொடர்பான தீர்மானம், உலக வர்த்தக அமைப்பில் விரைவில் நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நிலைக்கு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயாசிஸ் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement