dinamalar telegram
Advertisement

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

Share
சென்னை : உடல்நல குறைவால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி, 87, நேற்று இரவு காலமானார்.
சமூக ஆர்வலர், செயல்பாட்டாளரான, 'டிராபிக்' ராமசாமி, வெள்ளை சட்டை, காக்கி கலர் பேன்ட் உடன், உயர் நீதிமன்றத்தை வலம் வருவார். கையில் வழக்கு கட்டு, சட்டை பாக்கெட்டில் பேப்பர் கட்டு இருக்கும். பொது நல வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்தவர். சமூகத்தில் நிலவும் எந்தப் பிரச்னை
ஆனாலும், நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காணுவதில், ஆர்வம் உடையவர்.தன் வழக்கில், தானே ஆஜராகி வாதாடுவார். ஆங்கிலத்திலும் அருமையாகவாதாடுவார். கொரோனா காலத்திலும், ஆன்லைனில் ஆஜராகி உள்ளார்.

வயது மூப்பு காரணமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தி.நகரில் உள்ள வீட்டில் இருந்தபடியே, தேவையான சிகிச்சை மேற்கொண்டார்.
கடந்த மாதம், 20ம் தேதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் னுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்த நிலையில், நேற்று இரவு காலமானார்.இதையடுத்து, அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று காலை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில், இறுதி சடங்கு நடக்கும் என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமசாமி தொடுத்த வழக்குகள்* மோட்டார் பொருத்திய மீன்பாடி வாகனங்கள் இயக்கப்படுவதை எதிர்த்து, வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றார்

* சென்னையில் விதிமுறைகளை மீறி, கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க கோரி வழக்கு தொடுத்தார்

* பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையை ஆக்கிரமிக்கும் கடைகளை அகற்ற கோரி வழக்கு தொடுத்து, சாதக உத்தரவு பெற்றார்

* விதிமுறைகளை மீறி, 'பேனர்'கள் வைக்கப்படுவதை எதிர்த்து, வழக்கு தொடுத்தார். எங்கு பேனரை பார்த்தாலும், நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்

* மெரினாவில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்தும் வழக்கு தொடுத்தார்

* நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களை அகற்ற வழக்கு தொடர்ந்தார்

* மாநகராட்சியில் துப்புரவு பணிக்காக, போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமல், 'பேட்டரி' வாகனங்கள் இயக்குவதை எதிர்த்து வழக்கு போட்டார்

* சென்னை, ஜார்ஜ் டவுனில் இயங்கி வந்த இரும்பு கடைகளை, சாத்தன்காடு பகுதிக்கு மாற்ற வழக்கு தொடுத்தார்

* பாரிமுனையில் சட்டவிரோதமாக பட்டாசு கடைகள் நடத்த தடை கோரி வழக்கு போட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (49)

 • Karthik - Doha,கத்தார்

  தங்களது நற்பணிக்கு நன்றிகள். இவர்களுக்கெல்லாம் அரசு மரியாதை கிடைக்காதது வருத்தம்தான். உங்களது முயற்சிக்கான பலன் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். தங்களது ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.

 • Young Prince - Bangalore,இந்தியா

  நல்ல மனிதர். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்வோம். அவரை இழந்த அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்.

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  ஒரு சாமானிய இந்தியனுக்கு , இந்திய ஜனநாயகத்தில் எத்தனை உரிமைகளை சட்டம் கொடுத்துள்ளது என்று செய்து காட்டியவர். கொடூர குணம் உள்ள அரசியல் வாதிகளை, தைரியமாக எதிர்த்து நின்று போராடியவர். இவரைப்போன்ற துணிச்சல்காரரை இனி தமிழகம் பெறுவது கடினம். ஐயா டிராபிக் ராமசாமி வைகுண்டம் அடைய ட்ராபிக் ப்ரோப்லேம் ஏதும் இராது. பெருமாள் அவரை அன்போடு அரவணைத்துக்கொள்வார்.

 • S.PALANISAMY - COIMBATORE,இந்தியா

  மனிதரில் மாணிக்கம் அய்யா நீங்கள் உங்கள் புகழ் ஓங்கட்டும் . உங்களது ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இருக்கும் நல்லவர்களில் ஒருவர் மறைந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்

Advertisement