dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் மேலும் 21,228பேருக்கு கொரோனா: 144பேர் உயிரிழப்பு

Share
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 21,228பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 144பேர் உயிரிழந்து உள்ளனர். 19,112பேர் குணமடைந்து உள்ளனர்.



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,40,512 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,228பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,34பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், 21,194பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.


இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,49,292ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,32,38,475மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 12,450பேர் ஆண்கள், 8,778பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,53,945ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,95,309 ஆகவும் அதிகரித்து உள்ளது.


19,112பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,09,450 ஆக உயர்ந்தது.


நேற்று மட்டும் 144பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில்,58பேர் தனியார் மருத்துவமனையிலும், 86பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,612 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக விபரம்



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Jayvee - chennai,இந்தியா

    இனி இது போன்ற முக்கிய செய்திகளை தினமலர் போன்ற நடுநிலை ஆம்பளை தனமான பத்திரிகைகளில் (வேறு ஏதவது உண்டா) மட்டுமே காண முடியும்..

  • balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா

    "கபசுரநீரே"ன்னு போஸ்டர் போட்டாங்களே நம் உடன்பிறபப்பபுக்கள். ஞாபகம் இருக்கா ? இப்ப அந்த கபசுரநீரே முதன்மந்திரி ஆகிவிட்டார். மே 7 11.05 க்கு அப்பறம் கொராணா தமிழ்நாட்டிலிருந்து ஓடி மறைந்துவிடும். அரசவை கவிஞர். பாட்டெல்லாம் கூட்ட ரெடி செய்துவிட்டார்.

  • ஆப்பு -

    தளபதி வந்தாச்சு... ஊரடங்கு வரப்போகுது. விடியலை நோக்கி வெற்றிப் பயணம். ஆனா இப்பவே, சின்னதளபதி உதய் மாஸ்க் போடாமலேயே எல்லா தலிவர்களையும் போய் பாத்து ஆசி வாங்கிட்டாரு.

Advertisement