dinamalar telegram
Advertisement

சீனாவின் தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி: உலக சுகாதார அமைப்பு

Share
ஜெனீவா: 'சீனாவின் இரு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும். சில நாடுகள் இந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • Karthik - Doha,கத்தார்

    இந்தியாவிற்கு வேண்டாம்.

  • suresh - nagercoil,இந்தியா

    காலில் விழுந்தே விட்டீரா?

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இதிலும் வைரசை வைக்க போகிறான்.

  • Sathya -

    Proven again WHO is a Chinese Company

  • rajesh -

    இதுக்கு தானே அவன் கிருமியை இந்த உலகுக்கு கொடுத்து அழிக்க பாக்குறான்

Advertisement