dinamalar telegram
Advertisement

ஜேஇஇ மெயின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு: மத்திய கல்வி அமைச்சர்

Share
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜே.இ.இ மெயின் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மார்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த மெயின் தேர்வு மே 24 முதல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் தற்போதைய சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement