dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கோடை மழை வாய்ப்பு

Share
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாலை முதல் காலை வரை வெக்கை அதிகரிக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் கோடையில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கியது.பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 25 நாட்கள் பாடாய்படுத்தி எடுக்கும் .

அதன்படி வருகிற மே 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். ஏற்கனவே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் நிலவும் நாட்களில் மற்ற நாட்களை விட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் நல்லாட்சியாக மலர அந்த முக்கோடி தேவர்களே நான்கு நாட்கள் மலர்மழை பொழிந்து வாழ்த்துகிறார்கள் போலும்.நல்ல சகுனம் தான்.

Advertisement