dinamalar telegram
Advertisement

ரேஷன் பொருட்கள் இலவசம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

Share
புதுடில்லி: 'புதுடில்லியில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தலா ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

புதுடில்லியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் கொரோனா வைரசால் நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த 3 வாரங்களாக கடும் விதிகளுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் கொரோனா பாதிப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது:டில்லியில் ஊரடங்கு கொண்டுவந்தபின், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்த ஊரடங்கால் பலருக்கும் பணச்சிக்கல், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுமானம் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவுசெய்த கட்டடப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினோம்.

இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாகப் பொருட்கள் வழங்கப்படும். ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்களும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள். அவர்களும் ஊரடங்கு காலத்தில் சிரமப்படுவார்கள். இதனால் பதிவு செய்த ஓட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படாது. கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊரடங்கு நீக்கப்படும்.

இந்த உதவி மக்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பது தெரியும். இருப்பினும், இந்த நேரத்தில் அரசின் சிறிய உதவியாக அவர்களுக்கு இருக்கும். கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர்கள் நிதியுதவி பெற்றார்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • sankaseshan - mumbai,இந்தியா

    அடிச்சு வுடு உண்ணப்பன் வீட்டு காசா பணமா ,இலவசம் தொற்று டெல்லி வரை பரவியுள்ளது

  • ஆப்பு -

    இவிங்க சம்பளத்திலோ , வசதியிலோ ஒரு இம்மியும் குறையாது.

  • Ganesh G - Hyderabad,இந்தியா

    இதுபோன்று தமிழ்நாட்டிலிம் ஐந்தாயிரம் வழங்கப்படவேண்டும். ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஐந்தாயிரம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். அதை இப்போது செய்வாரா? இல்லை வெறும் பேச்சுக்கு மட்டும் அப்படி கூறினாரா?

  • S. Narayanan - Chennai,இந்தியா

    வீட்டு வேலை செய்பவர்கள் மற்ற வேலை செய்பவர்களுக்கு

Advertisement