dinamalar telegram
Advertisement

ஆணவம்தான் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கான காரணம்: சிவசேனா விமர்சனம்

Share
மும்பை: மேற்குவங்கத்தில் பா.ஜ.,வின் அகங்காரம், ஆணவம்தான் அக்கட்சி தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., 77 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது. பா.ஜ.,வின் தோல்வி குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பா.ஜ.,வின் அகங்காரம், ஆணவப் போக்குதான். மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சியில் இருந்து இறங்கியதற்கு கூட அந்தக் கட்சியின் சகிப்பின்மைப் போக்குதான் காரணம்.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அடைந்த பா.ஜ.,வால் மஹாராஷ்டிராவில் பந்தர்பூர் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட மனது வரவில்லை. பந்தர்பூர் சட்டசபைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாதியின் வேட்பாளர் தோற்றுவிட்டார். இருப்பினும் மகாவிகாஸ் அகாதியைச் சேர்ந்த அனைவரும் பா.ஜ.,வுக்கு வாழ்த்துக் கூறினோம், வெற்றியாளருக்கு வாழ்த்துக் கூறினார்கள். இவ்வாறு சிவேசனா தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (41)

  • venkata achacharri - india,இந்தியா

    மிக சரி ஜே ஆணவத்தால் தான் ஏ ஒன்னு ஆனார் அதுபோல ஆணவம் தான் பி ஜி பிக்கு இருக்கிறது விரைவில் அழிவு காலம் காத்து இருக்கிறது பதவி வரும் பொது பணிவு இல்லை

  • MANIAN K - Dubai ,இந்தியா

    உதவக்கரே

  • Sivaraman - chennai ,இந்தியா

    உங்கள் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது எதனால் என்று ராகுல் பவாருடன் ஆராயுங்கள் தோற்றது நாம்

  • Balasubramanian - Bangalore,இந்தியா

    பாஜக முதுகில் குத்தி, எதிரி கட்சியான காங்கிரஸ் தயவில், ஆட்சியை பிடித்தவர், ஆணவத்தை பற்றி பேசுவதா? வெட்கம்

  • Believe in one and only God - chennai,இந்தியா

    பிஜேபி தோற்றத்துக்கு காரணம்: மத வெறி பிடித்து நாட்டை ஏழை நாடாக ஆகியதால்

Advertisement