dinamalar telegram
Advertisement

பிரிந்தாலும் இணைந்தே செயல்படுவோம்: பில் கேட்ஸ்

Share
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஆனாலும் 'அறக்கட்டளையின் இணைத் தலைவர்களாகவும், அறங்காவலர்களாகவும் இருவரும் எப்போதும் போல் இருப்பார்கள்' என, அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், 'இந்த விவாகரத்து அறிவிப்புக்காக அவர்களின் பாத்திரங்களில் அல்லது நிறுவனத்தில் எந்த மாற்றங்களும் திட்டமிடப்படவில்லை. அறக்கட்டளை மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த திசையை தீர்மானிப்பதற்கு இருவரும் தொடர்ந்து இணைந்தே செயல்படுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

  • jeya kumar -

    Get lost

  • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

    முட்டாள்தனமாக இந்த மணமுறிவை நம்ம ஊரில் நடக்கும் பொறுப்பற்ற மணமுறிவுகளோடு ஒப்பு நோக்கக்கூடாது.. மனத்தால் ஒத்து வாழ முடியாவிட்டால் ஊருக்காய் பாசாங்கு செய்வது பொதுவாக அமெரிக்கர்களிடையே கிடையாது.. பில்கேட்ஸ்/மெலிண்டா இருவருமே பணத்தில் திளைப்பவர்கள் மட்டுமல்ல, தங்கள் தொண்டு நிறுவனங்களின் மூலம் பல சேவைகளையும, ஆராய்ச்சி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள்.. மனக்கசப்பு மட்டுமல்லாமல், திருமணம் என்கிற பந்தம் அவர்களுக்கு பலவிதங்களில் அசௌகரியமாக இருக்கலாம்.. இவர்களைக் காமல ஹாசனோடு ஒப்பிடுவதே அசட்டுத்தனம்..

  • siriyaar - avinashi,இந்தியா

    அதான் கிருஸ்துவமதத்தின் மகிமை எத்தனை காசு இருந்தென்ன பயன்..

    • தல புராணம் - மதுரை,இந்தியா

      பொண்டாட்டியை வெச்சி காப்பாத்த வக்கில்லாமல், விட்டு ஓடிப்போனவனை தூக்கி வைத்து ஆடும் நீ, "சிறியபுத்திக்காரன்" என்று மாற்றிக்கொள் ..

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    இந்த தாத்தா பாட்டி ஊடல் புதுசால்ல இருக்கு... இருக்கற இன்னும் கொஞ்ச நாள தம் கட்டி ஓட்ட முடியாதா?.... இந்தவயசுல பிரிந்து போயி என்ன பண்ண போறாங்களோ...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    விரிசலை ஓட்ட முடியாது போல இருக்கு கேட்ஸ் ஆர் ஓப்பன் ,கதவு திறந்திடிச்சு .போம்மா போ ஜி.எஸ்.ராஜன் சென்னை

Advertisement