ADVERTISEMENT
ஈரோடு : 'ஈ.வெ.ரா., மண்' என்று கூறப்படும், ஈரோடு மாவட்டத்தில், தி.மு.க.,வின் மூத்த பெண் தலைவரை வீழ்த்தி, பா.ஜ., வெற்றி பெற்றது, அக்கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.,வுக்கு கிடைத்த தொகுதிகளில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி முக்கியமானது. ஈரோடு மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு கிடையாது. எனவே, மொடக்குறிச்சியில் பா.ஜ., வெற்றி பெற இயலாது என்றே, அனைவரும் கருதினர். மேலும், தி.மு.க., சார்பில், மூத்த தலைவரான, சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
![Latest Tamil News]()
இந்த சூழ்நிலையில், ஈ.வெ.ரா., பிறந்த ஈரோடு மாவட்டத்தில், பா.ஜ.,வை வெற்றி பெற வைக்க வேண்டும் என, பா.ஜ., தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர், அமைதியாக தேர்தல் பணிகளை துவக்கினர். முதலில், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை இழுக்க, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி, தங்களுக்கு ஒத்துழைக்க வைத்தார்.
![Latest Tamil News]()
அதன்பின், தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை வளைத்து, அமைதியாக இருக்க வழி செய்தார். இதற்கு பலன் கிடைத்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில், மொடக்குறிச்சி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதி, 281 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளரை வீழ்த்தி, ஈ.வெ.ரா., பிறந்த மண்ணில் தாமரையை மலர செய்துள்ளார்.

வாசகர் கருத்து (302)
கோவையில் வென்ற இரண்டு தொகுதிகளும் சந்தேகத்திற்குரியது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
அதிமுக காலில் விழுந்து சீட்டு வாங்கி ஜெயித்த என்று கூறுவதை விட்டு விட்டு, மிக வலுவான கட்சி என்று கூவும் தி மு க எதனை சின்னஞ்சிறிய கட்சிகளோடு கூட கூட்டு வைத்துத் தான் ஜெயித்தது. இந்த வகையில் ,, சீமான் கட்சியை கூட பாராட்டலாம் . தனியாக நின்றது. அவ்வாறில்லாமல், ஐம்பது வருடங்களுக்கு மேலான கட்சிக்கு, தனியாக நின்று தேர்தலை சந்திக்க திராணி இல்லாத கட்சிக்கு, இதை தோல்வியாகத்தான் பார்க்க வேண்டும்.
நோட்டா கூட காரணமாக இருக்கலாம். ஆனால் மக்கள் போலி மதச்சார்பின்மை, போலி நாத்திகம் போன்றவற்றை உணர்ந்தே இருக்கிறார்கள் என்று புரியவருகிறது
Bro Raja, keep complaining always...that is our only job....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழ்நாட்டில் தாமரை மலரும் , திராவிடம் தேவை இல்லை தமிழகத்துக்கு