dinamalar telegram
Advertisement

தேனியில் மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க.,தோல்வியடைந்தது ஏன்

Share
Tamil News
தேனி; தேனி மாவட்டத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பன்னீர்செல்வம் ஆகியோரை முதல்வராக்கி அழகு பார்த்த மாவட்டம் தேனி. இங்குள்ள நான்கு தொகுதிகளும் அ,தி.மு.க. கோட்டை எனும் அளவிற்கு கட்சி பலம் வாய்ந்த பகுதியாகும். 2016 சட்டசபை தேர்தலிலும் இங்குள்ள 4 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. ஜெ., மறைவுக்கு பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் 2019 இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளை தி.மு.க., கைப்பற்றியது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தேனி சொந்த மாவட்டம் என்பதால் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என கருதினர். ஆனால் இந்தசட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளை தி.மு.க. மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. அ.தி.மு.க. தன்னிடமிருந்த கம்பம் தொகுதியையும் தி.மு.க.,விடம் பறி கொடுத்தது. போடியில் ஓ.பன்னீர் செல்வம் வெற்றிபெற்றார். அ.தி.மு.க. கோட்டையில் இங்கு ஓட்டை விழுந்தது பற்றி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிருப்திஇத்தேர்தலில் போடியை தவிர மற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் சொதப்பியதாக ஆரம்பத்தில் இருந்தே கட்சியினர் புலம்பினர். கம்பம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஜக்கையனுக்கு அடுத்து வெற்றி பெற வாய்ப்பிருந்தும் ஏனோ அவருக்கு சீட் தராமல் ஒதுக்கினர்.

தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு அ.தி.மு.க. சீட் வழங்காத அதிருப்தியை தி.மு.க. சரியாக பயன்படுத்தி ராமகிருஷ்ணனை நிறுத்தி வெற்றியை தட்டிப் பறித்தது.பெரியகுளம் (தனி) தொகுதியில் உள்ளூரில் கட்சி நிர்வாகிகள் பலர் சீட் கேட்டிருந்தும் எதிபார்க்காத வேட்பாளராக சென்னையில் வசித்த அரசு ஊழியர் முருகனை களமிறக்கியது. அவர் கிராமத்தினர் பலருக்கு தெரியாதவர் என விமர்சனம் செய்தனர். ஆனால் தி.மு.க., இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சரவணக்குமாரை நிறுத்தி தொகுதியை தக்க வைத்து கொண்டது. ஆண்டிபட்டி தொகுதியில் ஒரே வீட்டில் அண்ணன், தம்பிகளுக்கு இடைத்தேர்தலிலும், பொது தேர்தலிலும் சீட் கொடுத்தது அ.தி.மு.க. கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளப்பினர். ஒரு முறை தோல்வியை தழுவியவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கி தொல்வியை வரவேற்று கொண்டனர்.

வேட்பாளர் தேர்வில் கட்சி நிர்வாகிகள் ஆலோனை பெற்று, வேட்பாளரின் சாதக, பாதம் என ஆராயாமல் கட்சி அறிவித்தது.துணைமுதல்வர் தேனி மாவட்டம் வந்தபோதுமட்டும் இங்குள்ள நகர், ஒன்றிய நிர்வாகிகள் அவர் முன் ஆஜர் கொடுத்து விட்டு சம்பிரதாயத்திற்கு தேர்தல் வேலை செய்ததாகவும், உணர்வுடன் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் நிர்வாகிகளிடம் இல்லை எனவும் கட்சியினர் புலம்புகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Sivaraman - chennai ,இந்தியா

    எடப்பாடி டாக்டர் ராமதாஸ்க்கு கொடுத்த முக்கியத்துவமே மற்ற சமூக குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகள் சரிந்து தோல்விக்குக் காரணம் என்பது தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் அப்பட்டமான உண்மை

  • bal - chennai,இந்தியா

    பன்னீர்தான் காரணம்...

Advertisement