dinamalar telegram
Advertisement

மன உளைச்சலில் சுகாதார ஊழியர்கள்

Share
Tamil News
பழநி : பழநியில் கொரோனா தொற்று அதிகரிப்பால் சுகாதாரப் பணியாளர்கள் மன உளைச்சலில் பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பழநி பகுதி சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், கண்காணிப்பாளர்கள், களப்பணியாளர்கள், செவிலியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. சில பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தடுப்பூசி மையங்களில் ஆள் பற்றாக்குறையால் மாற்று ஏற்பாடு செய்வது, தொற்று உறுதி செய்த நோயாளிகளை மையங்களில் அனுமதிப்பது, கொரோனா பற்றிய விளக்கமளித்தல் என விடுமுறை இன்றி தொடர் பணி செய்கின்றனர். இதனால் சுகாதார பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement