dinamalar telegram
Advertisement

மதுரை சினிமா செய்திகள்

Share
அதிர்ச்சியில் 'நண்பன்' நடிகை!தமிழில் நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. இவர், வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூ உடன் பழகி வந்தார். இந்த காதல், சில ஆண்டுகளுக்கு முன் முறிந்தது. இருவரும் காதலித்த சமயத்தில், சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதில் அவர் கர்ப்பமாகி, அதை கலைத்ததாகவும் செய்திகள் பரவின. இது குறித்து, இலியானா கூறியதாவது:இது போன்ற செய்திகளை கேட்கும்போது வருத்தமாக உள்ளது. நான் தற்கொலை செய்ததாக வந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியடைந்தேன். நான் எதற்காக அப்படி ஒரு முடிவு எடுக்கப் போகிறேன்; அதற்கான அவசியமும் இல்லை. யார் இது போன்ற செய்திகளை பரப்புகின்றனர் என தெரியவில்லை. இது அனைத்துமே, அப்பட்டமான வதந்தி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பிரபாஸ் படத்தில் கே.ஜி.எப்., ஹீரோயின்!கே.ஜி.எப்., படம் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இப்போது, தமிழில் அஜய் ஜானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில், நாயகியாக நடித்திருக்கிறார். இவர் அடுத்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில், பான் இந்திய படமாக உருவாகி வரும், சலார் படத்தில், ஒரு பாடலுக்கு ஆட உள்ளார். கே.ஜி.எப்., மூலம் தனக்கு அடையாளத்தை கொடுத்த, பிரசாந்த் நீல் மீது கொண்ட அன்பின் காரணமாக, இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதித்துள்ளார் ஸ்ரீநிதி. கொரியன் 'ரீமேக்'கில் ரெஜினா!சமந்தா நடித்த, கொரியன் படத்தின் ரீ-மேக்கான ஓ பேபி படத்தை தயாரித்த, 'மிட்நைட் ரன்னர்ஸ்' நிறுவனம், அடுத்து ஒரு கொரியன் படத்தை, 'ரீ-மேக்' செய்ய உள்ளது. சுதீர் வர்மா இயக்கும் இந்த ஆக் ஷன், த்ரில்லர் படத்தில், நடிகை ரெஜினா போலீஸ் அதிகாரி வேடத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகை நிவேதா தாமசும், முக்கிய வேடம் ஏற்கிறார். இப்படத்திற்கு, ஷாகினி தாகினி என, பெயரிட்டுள்ளனர். 'பைக்'கை விற்கும் நடிகர்தெலுங்கு, ஹிந்தியில் நடிப்பவர் ஹர்ஷவர்தன் ரானே. தற்போது, 'கொரோனாவின் தீவிரத்தால், ஆக்சிஜன் தட்டுப்பாடு சில ஊர்களில் நிலவுவதால், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய, தன் பைக்கை விற்கிறேன்' என, அறிவித்துள்ளார். இது குறித்து அவர், 'ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க, என் மோட்டார் சைக்கிளை தருகிறேன். இப்போதைய கோவிட் தேவைக்கு, மக்களுக்கு இதை வழங்குவோம். ஐதராபாதில் சிறந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், எங்கு கிடைக்கும் என்பதை தெரிவியுங்கள்' என, 'இன்ஸ்டா'வில் பதிவிட்டுள்ளார். அம்மு அபிராமிக்கு கொரோனாகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, தனுஷின் அசுரன் படத்தில், அவரது காதலியாக நடித்தவர், அம்மு அபிராமி. தற்போது, சில படங்களில் நாயகியாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன், இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது.இது குறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது, எனக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மருத்துவர் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்தி, தேவையான மருந்துகள் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.ஓ.டி.டி.,யில் சிவாவின் 'சுமோ'கொரோனாவால் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளதால், பல படங்கள் ஓ.டி.டி.,யில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஹோசிமின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சுமோ படமும், ஓ.டி.டி.,யில் வெளியாக உள்ளது. மல்யுத்த வீரரின் கதையை தழுவி, காமெடியாக உருவாகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும்!ஆட்சி மாறினால், காட்சிகள் மாறும் என்று சொல்வர். அப்படி தான், தமிழகத்தில் இப்போது நடக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினமே, தமிழ் சினிமாவில் உள்ள மூன்று தயாரிப்பாளர் சங்கங்களும் போட்டி போட்டு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அதே போன்று, திரையுலகில் உள்ள பல நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும் வாழ்த்தியபடி உள்ளனர். நடிகர் சூரி நேரடியாகவே சென்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோருக்கு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement