dinamalar telegram
Advertisement

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Share
தமிழக நிகழ்வுகள்

1. வாலிபருக்கு 'குண்டாஸ்'

திருத்தணி : திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் மகன் உதயகுமார், 23. இவர் மீது, திருத்தணி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், மதுபாட்டில்கள் விற்பனை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஒரு வாரம் முன், உதயகுமார், ஒருவரை வழிமடக்கி தாக்கி, பணம் பறிக்க முயன்றதாக போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், திருத்தணி போலீசார் அனுப்பிய கடிதத்தின்படி, எஸ்.பி., அரவிந்தன், உதயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதை தொடர்ந்து, கலெக்டர் பொன்னையா, உதயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து, உதயகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டார். இதற்கான நகல், புழல் சிறையில் உள்ள உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.2. விதிமீறிய தொழிற்சாலைக்கு அபராதம்

மணலி : விதிமீறி செயல்பட்ட, சலுான் கடைக்கு, 'சீல்' வைத்த, மாநகராட்சி அதிகாரிகள், தொழிற்சாலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.மணலி மண்டலத்தில், தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.


அந்த வகையில், மாநகராட்சி மற்றும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத வர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.அதன்படி, மணலி, 20வது வார்டு, காமராஜர் சாலையில், விதிகளை மீறி, சலுான் கடை ஒன்று செயல்பட்டுள்ளது. தகவலறிந்து, நேற்று காலை, அங்கு சென்ற உதவி வருவாய் அலுவலர் திருபால், பாஸ்கர் உள்ளிட்டோர், கடையை மூடி, 'சீல்' வைத்தனர்.மேலும், சடையங்குப்பம் கிராமத்தில், முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட, தனியார் ஸ்டீல் தொழிற்சாலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.


3. பெண்ணிடம் செயின் பறிப்பு

பீர்க்கன்கரணை: புது பெருங்களத்துார், சத்தியமூர்த்தி சாலை, தியாகராயர் தெருவைச் சேர்ந்தவர், காயத்ரி, 36. இவர், நேற்று மதியம், வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று, வீடு திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த, மர்ம நபர்கள், காயத்ரியின் கழுத்தில் இருந்த, 5 சவரன் செயினை பறித்து தப்பினர். இது குறித்து, பீர்க்கன்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
4. சிறுமிக்கு திருமணம் ; 5 பேர் மீது வழக்கு

மரக்காணம் : சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் வசந்தகுமார்,20; இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது.இதுபற்றி தகவலறிந்த மரக்காணம் தாசில்தார் உஷா, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த வசந்தகுமார், அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.5. திருச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

திருச்சி : துறையூரில் வீட்டின் கதவை உடைத்து, வீட்டிலிருந்த, 25 பவுன் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பாஸ்கர், 54. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஹேமாவாணி என்ற மகளும், திலக்அமர்நாத் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, பாஸ்கரும், அவருடைய மனைவியும் பின்பக்க கதவை தாழிட்டு விட்டு, முன் பக்கத்தில் உள்ள வராண்டாவில் துாங்கியுள்ளனர்.நள்ளிரவு மூன்றரை மணி அளவில் பாஸ்கர் எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 25 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாஸ்கர் துறையூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணம் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
-இந்தியாவில் குற்றம் :

பாக்., அத்துமீறல்

புதுடில்லி: எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதாக, இந்தியா, பாகிஸ்தான் ராணுவம், பிப்., 25ல் அறிவித்தன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே, பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக, பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
உலக நடப்பு

ஆபாச வலைதளம் நிர்வாகிகள் கைது

பெர்லின் : ஜெர்மனி போலீசார், சிறார் ஆபாச வலைதளத்தை நிர்வகித்து வந்த மூவரை, அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மனியில், பிராங்பர்ட் நகர போலீசாருக்கு, 'பாய்ஸ்டவுன்' என்ற சிறார் ஆபாச வலைதளம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தனிக்குழு அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ஆபாச வலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, ஏராளமான ஆபாச படங்கள், கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன.


இது குறித்து, ஜெர்மனி போலீசார் கூறியதாவது:கடந்த, 2019 முதல், சிறார் ஆபாச தளத்தை இந்த கும்பல் நடத்தி வருவது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட நபர், பராகுவே நாட்டில் பதுங்கி இருந்தார். அவரை, ஐரோப்பியா போலீசார் உதவியுடன் கைது செய்து உள்ளோம்.அவரை நாடு கடத்த விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில், உலகெங்கிலும், நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பணம் செலுத்தி, சிறார் ஆபாச படங்களை பார்த்து வந்து உள்ளனர். வலைதளத்தை முடக்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement