dinamalar telegram
Advertisement

தொற்று தடுப்புக்கு

Share
சென்னை : -நாடு முழுவதும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, எஸ்.பி.ஐ., எனப்படும், 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' சார்பில், 71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, எஸ்.பி.ஐ., தலைவர், தினேஷ் காரா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா, இரண்டாவது அலை பரவலை தடுக்க, சில மாநிலங்களில், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவும், 1,000 படுக்கை வசதி அமைக்கவும், 30 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். உயிர் காக்கும் உபகரணங்கள், ஆக்சிஜன், பராமரிப்பு மையங்கள், ஆம்புலன்ஸ், முக கவசம், உணவு உள்ளிட்டவைக்கு, 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.ஆய்வகம், தடுப்பூசி உபகரணங்கள் வாங்க, அரசுக்கு கூடுதலாக, 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

சமூக தேவைகளை நிவர்த்தி செய்ய, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.கொரோனா பாதித்த, எஸ்.பி.ஐ., ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தார், தனிமைப்படுத்தி கொள்ள, நாடு முழுவதும் உள்ள, 60 பயிற்சி மையங்கள், தனிமை முகாம்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்த வகையில், மொத்தம், 71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு வங்கியின் லாபத்திலிருந்து, பி.எம்., கேர் நிதிக்காக, 108 கோடி ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement