dinamalar telegram
Advertisement

தாம்பரம், பல்லாவரத்தில் அ.தி.மு.க., தோல்வி ஏன்?

Share
-தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., அரசு, தாம்பரம், பல்லாவரம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறியதே, அந்த தொகுதிகளில் தோல்வி அடைய காரணம் என, வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில், சென்னை மற்றும் அதன் புறநகரை ஒட்டிய, சட்டசபை தொகுதிகள் அனைத்திலும், அ.தி.மு.க., தோல்வியடைந்து உள்ளது.

மேம்பாடில்லை : இதில், தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, 36 ஆயிரத்து, 824 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் ராஜாவிடம் தோல்வியடைந்தார்.பல்லாவரம் தொகுதியில், போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், 37 ஆயிரத்து, 781 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் கருணாநிதியிடம் தோற்றார்.அ.தி.மு.க.,வின் தோல்விக்கான காரணமாக, வாக்காளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்த, 2011 முதல், பத்து ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தும், தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படாதது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாதது, சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சியில் கவனம் செலுத்தாதது என, பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.பல்லாவரம் தொகுதியில், சுற்றியுள்ள உள்ளாட்சிகளில், பாதாள சாக்கடை திட்டமின்றி, நீர்நிலைகள் பாழடைந்தன.மாற்றம் தேவைஅவற்றை, சீரமைக்க தொடர்ந்து கோரிக்கை வலுத்ததால், பல இடங்களில் நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகள் துவங்கின. அப்பணிகள் சரியான நேரத்தில் முடிக்கப்படாததால், திட்டத்தின் பலன்கள் மக்களை சென்றடையவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான், இவை நிறைவேற்றப்படும் என, வாக்காளர்கள் நம்பியதால், இரு தொகுதிகளிலும், ஆளும் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இங்கு, மீண்டும், தி.மு.க., வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement