dinamalar telegram
Advertisement

இல்லை! வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடுக்கு விடுமுறை... வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Share
Tamil News
சென்னை : வணிகர் தினத்தன்று, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை இல்லை என, வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.தமிழகத்தில், மே 5ம் தேதி, வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, வியாபாரிகள் கொண்டாட்டத்திற்காக, கடைகள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டு வணிகர் தின கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், நடப்பாண்டிலும் வணிகர் தின கொண்டாட்டம் நடக்கப்போவது இல்லை.இதனிடையே, கட்டுப் பாடுகளுடன் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. மார்க்கெட்டிற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.

இதனால், வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். எனவே, வணிகர் தினமான நாளை, கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல இயங்கும் என, பல்வேறு வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement