dinamalar telegram
Advertisement

கமல், சீமான் கட்சிகளுக்கு ஓட்டு: தினகரன், விஜயகாந்த் கட்சிகள் ஷாக்

Share
சென்னை :தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்ததாக, பல தொகுதிகளில், நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யமும், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. கமலின் மக்கள் நீதி மய்யம், 135 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சிகளின் தலைவர்களும் வெற்றி பெறவில்லை.
ஆனால், இரு கட்சிகளின் வேட்பாளர்களும், பெரும்பாலான இடங்களில், 1௦ ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.அதிலும், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க., வேட்பாளர்களையும், இந்த இரண்டு கட்சிகளும் பின்னுக்கு தள்ளியுள்ளன.உதாரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 தொகுதிகளிலும், ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன. இந்த இரு கட்சி வேட்பாளர்களின் ஓட்டுகளை விட, ஐந்து மடங்கு குறைவான ஓட்டுகளை, ஆயிரம், இரண்டாயிரம் என்ற அளவில் தான், தினகரன் மற்றும் விஜயகாந்த் கட்சியினர் பெற்று உள்ளனர்.

தலைநகரான சென்னை மாவட்டத்திலேயே பெரும்பாலான தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கு மேல் இரண்டு கட்சிகளும் ஓட்டுகளை பெற்றுள்ளன. அதில் நா.த.க., அதிகபட்சமாக, ஆர்.கே.நகரில், 20 ஆயிரத்து, 437 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில், 3,357 ஓட்டுகளும் பெற்றுள்ளது. ம.நீ.ம., கட்சி அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில், 23 ஆயிரத்து, 72 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில், 3,763 ஓட்டுகளும் பெற்றுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Sivaraman - chennai ,இந்தியா

    ஆர் கே நகர் தினகரன் செயிச்ச ஒட்டு காணாம போச்சே என்னய்யா மந்திரமா இருக்கு 1

  • Raj - Namakkal,சவுதி அரேபியா

    அடுத்த தேர்தலில் அதிமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை பெரும்

  • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

    சீமானைப்போல நல்ல திறமையான பேச்சாளர்கள் சிலர் சட்டசபையில் இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

    • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

      அது பேச்சு போட்டி நடத்துற இடம் இல்லை அது ....

    • Kannan - Madurai,கனடா

      அப்புறம் கொள்ளையடிக்க திட்டம் போடுற இடமா?

  • ஆப்பு -

    பா.ஜ இப்பிடியே இந்தியை திணிச்சிக்கிட்டுப் போனா, நாம் தமிழர் கட்சிதான் மக்களுக்கு.

    • Sridhar - Jakarta

      இந்திய திணிச்சது காங்கிரஸ். நாட்டின் நாணயத்தின் குறியீடு கூட ஹிந்தி எழுத்தில் அனுமதித்தது கட்டுமரமும் சிதம்பரமும் ஆனால் நம்மூரு ஆப்பு குஞ்சுங்க பிஜேபியையே வசைபாடிட்டு இருக்குங்க. இத்தனைக்கும் நாட்டின் பிரதமர் நம்ம மொழியையும் கலாச்சாரத்தையும் உலகெங்கும் உயர்வாக தூக்கிப்பிடிக்கிறார், திருவள்ளுவர், பூங்குன்றனார்னு மேற்கோள் காண்பிக்கிறார். உலகிலேயே மிகப்பழமையான மொழி தமிழ் என்று ஒப்புக்கொண்ட தமிழரல்லாத ஒரே நபர் நம் பிரதமர் தாம். சரியான கட்டமைப்பை இல்லாத சிறிய கட்சிகளில் தலைவர்களின் பேச்சு கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், நிர்வாக அனுபவமும் அமைப்பு மேலாண்மையும் இல்லாத அவர்களால், பெரும்கேடு விளையும். தேசத்தின் தலைமை ஆளுமை என்பவை சாதாரணவிசயங்கள் அல்ல.

    • pradeesh parthasarathy - Mylapore

      ஏன் பா ... நீங்க இருவரும் ஒன்னு தான் ... உங்களுக்குள்ள என்ன வாக்குவாதம் ....

Advertisement