dinamalar telegram
Advertisement

முதல்வராக ஸ்டாலின் 7ம் தேதி பதவியேற்பு

Share
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் 7ம் தேதி பதவியேற்கிறார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவோர் பற்றிய எதிர்பார்ப்பு, அக்கட்சி வட்டாரத்தில் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் பட்டியல் தயாரிப்பு
பணி தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில், ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது. அதில், சட்டசபை தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கவர்னர் மாளிகையில், எளிமையாக, முதல்வர் பதவி ஏற்க உள்ளார் ஸ்டாலின்.


இந்நிலையில், இன்று மாலை, 6:00 மணிக்கு, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ..,க்கள் கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 6:00 மணிக்கு, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
இக்கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக, ஒருமனதாக ஸ்டாலினை
தேர்வு செய்வதற்கான தீர்மானத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கையெழுத்திடுவர்.
அதன் அடிப்படையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி, கவர்னருக்கு கோரிக்கை விடுத்து, தி.மு.க., சார்பில் கடிதம் தயாராகும். பின், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், கவர்னர் மாளிகை சென்று, கவர்னரை சந்தித்து, அக்கடிதத்தையும், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலையும் அளிப்பர்.
அந்த கடிதத்தில், பதவியேற்பு விழா நடக்கும் தேதி மற்றும் அமைச்சர்கள் விபரமும் அடங்கியிருக்கும். அக்கடிதத்தை ஏற்று, ஸ்டாலினை பதவியேற்க, கவர்னர் அழைப்பு விடுவார்.
அழைப்பு விடுத்ததும், பதவியேற்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வரும், 7 ம் தேதி வெள்ளிக்கிழமை, நல்ல நாள் என்பதால், அன்று பதவியேற்பு விழா நடத்தப்படும் என, தெரிகிறது.பதவியேற்பு நாளில் அல்லது அதற்கு முந்தைய நாள் மாலையில், அமைச்சரவை பட்டியல் வெளியாகலாம். தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றவர்களில், முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர்; புதுமுகங்களும் நிறைய உள்ளனர். அதனால், இரு தரப்புக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருவதாக சொல்கிறது, தி.மு.க., வட்டாரம்.

அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு



சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும்,'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோருடன், ஸ்டாலின் நேற்று தன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின், அதிகாரிகளுக்கு, அவர் பிறப்பித்த உத்தரவுகள்:
* கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, எவ்வித தொய்வுமின்றி, முழு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.


* தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு, சென்னையில் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


* நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (46 + 52)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அன்று காலை 10.30 மேல் 12 மணிக்குள் பதவி ஏற்கும் தைரியம் உண்டா?

  • MURUGESAN - namakkal,இந்தியா

    குறள் 542: வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி - கலைஞர் விளக்க உரை: உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது / குறள் 547: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் - கலைஞர் விளக்க உரை: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும் / குறள் 548: எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் - கலைஞர் விளக்க உரை: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

  • SENTHIL - tirumalai,இந்தியா

    நீங்க தான் பகுத்தரிவு பகலவன் ஆச்சே, நாள் நேரம் பார்க்காம பதவி ஏற்க வேண்டியது தானே. இன்றும் நாளையும் அஷ்டமி நவமி, அதனால் வெள்ளி அன்று பதவி ஏற்ப்பா.... ஏன் அன்று காலை 10:30 முதல் 12 ராகு காலம் அப்ப பதவி ஏற்று பகுத்தரிவு பறை சாற்ற முடியுமா?. இதில் என்ன ஒரு வேடிக்கை எனறால் இரண்டு நாட்களாக இங்கு கருத்து எழுதும் பெரும்பாலோர் இவர்க்கு சம்ப்ரதாயமாக கூட வாழ்த்து சொல்ல வில்லை. இதில் இருந்தே தெரிகிறது இவர் வந்தது பெரும்பாலோர் யாருக்கும் இஷ்டமில்லை. என்ன பண்ணுறது எல்லாம் விதி. 60 மாதம் அனுபவித்து ஆக வேண்டும்.

  • Gopala Krishnan - Tiruppur,இந்தியா

    சுவாசக்காற்றை தயாரிக்க அல்லாடும் மத்திய மாநில அரசுகள் வனங்களை காக்க முன் வர வேண்டும். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் தற்போது நோய் தொற்று காலத்தில் சுவாசக்காற்றுகாக அல்லாடுவது போல் எப்போதும் அல்லாடும் நிலையேற்படும். வன நிலங்களை ஆக்ரமித்து இருப்பவர்கள் மீது எவ்வித கரிசனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) - Gummidipoondi,இந்தியா

      நேரத்தை நீதான் பார்க்கிறாய் ஆவர் அதை பார்க்கவில்லை.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    அமெரிக்கா உட்பட 19 நாடுகள் இந்தியர்களுக்குத் தடை விதித்திருக்கின்றன. இந்தியா வின் நிலைமை இத்தனை மோசமாக ஆகிவிட்டது. மோடியை ட்ரம்ப் வரவேற்றதற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தமோ??

Home மே-7 ல் ஸ்டாலின் பதவியேற்பு ? (50)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    ஐம்பது வருட ஆட்சி கனவு. அரசியல் வாரிசு ஒன்று ஐம்பது வருட காலமாக ஆட்சி அமைக்க கனவு கண்டு இன்று அந்த நிறைவேறப்போகிறது. வந்த இந்த வாய்ப்பை முறையாக, திறமையாக, ஊழல் இல்லாமல், நேர்மையாக பயன்படுத்திக்கொண்டால், அதைவிட இந்த வாரிசுக்கு என்ன வேண்டும். மக்களும் அப்படி ஒரு நேர்மையான ஆட்சி மலரக்கூடாதா என்று ஏங்கிபோய் , மீண்டும் வாரிசு ஒன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போல. பார்க்கலாம் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று வரும் நாட்களில்.

  • Ramesh RK - Theni,இந்தியா

    தனியார் பள்ளி கட்டணத்தை குறைத்து ஏழை மாணவர்கள் அங்கு படிக்கச் வலி செய்யவேண்டும் அங்கு தான சிறந்த ஆசிரியர் கொண்டு சிறந்த கல்வி கிடைக்கிறது அல்லது அரசு பள்ளி ஆசிரியர் குழந்தைகள் அரசு ஊழியர் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்கச் வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே

  • குமார் -

    திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று பெயர் பெற வேண்டும். வாழ்த்துக்கள்.

  • thiagarajan V -

    பராக்! பராக்! ஜாக்கிரதை ! வரும் 5 வருடங்களுக்கு.:-நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை வங்கி பெட்டகத்தில் வைக்கவும். பணத்தை வங்கியில் விட்டு வைக்கவும். வீடுகளை சுமாரான லட்சணத்தில் கட்டவும். நன்றாக கட்டியிருந்தால் அங்கங்கு இடித்து அலங்கோலப் படுத்தவும். அழகான பெண்களை பக்கத்து மாநிலங்களில் உள்ள உறவுக்காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி விடவும். உஷார்! உஷார்!!உஷார்!!!

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

    ஸ்டாலின்தான் வாராரு...ஆட்டையை போடா...போறாரு, அதுதான் மக்களோட முடிவு....

  • jysen - Madurai,இந்தியா

    வீட்டையும் சொத்தையும் பத்திரமா பாதுகாக்க வேண்டும். முடிந்த வரை வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. வெளிநாட்டு பயணம் செய்ய கூடாது.

  • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

    ஸ்டாலின் தான் வந்து விட்டார்... விடியல் கிடைக்க தயார்... சூரியன் சுட்டெரிதத்தில் பொசுங்கியது தாமரை. அடுத்த ஓராண்டில் தமிழகம் எழுச்சிமிகு மாநிலமாக மாறும் நம் தளபதியின் கையில். தளபதி தனது வீர வாள் சுழற்றுவார். தீய சக்திகள் நாட்டை விட்டு விலகி ஓடும். வாழ்க வளமுடன்.

  • MURUGESAN - namakkal,இந்தியா

    லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் கனவுகளுடன் காத்திருக்கும் தமிழக மக்கள். நிறைவேறுமா எங்கள் பேராசை.

  • Nallavan Kettavan - Madurai,இந்தியா

    7 is the good number

    • raghavan - Srirangam, Trichy,இந்தியா

      Is it? What about 7.5?

    • karthika - chennai,இந்தியா

      ஆனா 7 and half bad number..especially for TN people...Wt to do???

  • K R Ramakrishnan Ramakrishnan -

    இனிமேல் தான் இருக்கு ராசா. தனி மெஜாரிட்டி வந்துவிட்டது. 10 வருட தவிப்பு. பதவிக்கு குடுமிபிடி சண்டை வீட்டில் மற்றும் கட்சியில் பலமாக ஆரம்பித்திருக்கும். சத்தியமாக யாரையும் திருப்தி படுத்தவே முடியாது. தேர்தல் ஆலோசகர் போல நல்லாட்சி ஆலோசகர் ஏற்பாடு செய்து கொண்டால் தப்பிக்க வழி கிடைக்கலாம்.

  • N.K - Hamburg,ஜெர்மனி

    ஆட்சியை தான் பிடித்தாகிவிட்டதே. தயவு செய்து அந்த விக்கை கழற்றவும்.

  • Elango - Kovai,இந்தியா

    முதலில் கொரோணாவை கட்டுப்படுத்த வேண்டும்....

  • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    விதி வலியது கலியுகத்தில் நல்லவங்க தமிழன்களுக்கு தேவையில்லை

  • பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா

    வாழ்த்துக்கள் ... ஆனா காரோண விடுமா இவர் பதவி ஏற்க? பொறுத்து இருந்து பார்ப்போம் ...

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    ஐநூறு வாக்குறுதிகள் மக்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவினருக்கு அழுத்தம் தர வேண்டும்,,,

  • sridhar - Chennai,இந்தியா

    மே ஏழு, தசமி , குருவாரம் , பகுத்தறிவு .

  • s vinayak - chennai,இந்தியா

    மின்கட்டண கணக்கீடு இனி மாதாமாதம் என்பது, பால் விலை குறைப்பு, பெட்ரோல் , டீஸல் விலை குறைப்பு இன்ன பிற இதையெல்லாம் உடனே அமல்படுத்த வேண்டும். இதெல்லாம் நான் சொல்லவில்லை.

    • ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" - செந்தமிழ்நாடு ,இந்தியா

      இல்லையே இதை எல்லாம் நீ மனதில் வைத்து தானே ஸ்டாலினிக்கு வோட்டு போட பயப்படாதே செய்வார் உன்னை புலம்ப விட மாட்டார்

    • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

      என்ன செய்தாலும் சங்கிகளுக்கு திருப்தி வராது குற்றம் சொல்லி கொண்டே இருப்பார்கள் நீதி பதிகள் சொல்லுவது போல் தமிழன் வேலை தமிழருக்கே .

  • MURUGESAN - namakkal,இந்தியா

    தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகும் தி மு க தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். லஞ்சம் இல்லாத ஊழல் இல்லாத ஆட்சி அமைத்து மக்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் - இப்படிக்கு தமிழக மக்கள்.

  • மாரியப்பன் -

    இங்கே கருத்து பதிவிடும் சங்கிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வெறும் நடிப்பு மட்டுமே. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்கிறது பகவத் கீதை. எல்லாம் அவன் செயல் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சங்கிகளுக்கு கடவுள் செயலைக் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அவர்களிடம் இருப்பது கடவுள் நம்பிக்கை கூட இல்லை. வெறும் ஜாதி வெறி மட்டுமே

    • Svs Yaadum oore - chennai

      எவனுக்கு மத வெறி மற்றும் ஜாதி வெறி என்று இரண்டுமே உள்ளவன் ??...திருச்சி மேற்கில் கிறிஸ்துவ மத வெறியன் இனிகோ இருதயராஜ் வெற்றி ...மேய்ப்பர் ஆலயத்தில் மட்டும் வோட்டு கேட்டவன் இவன் ..இவன் நடத்துவது கிறிஸ்துவன் நல்லெண்ண இயக்கமாம் ..அறிவாலயத்தில் நாணயமாக கொடுக்க வேண்டியதை கொடுத்து சீட்டு வாங்கினான் ....இவனை பற்றி திருச்சி தி மு க திராவிடன் அறிவாலயத்தில் புகார் செய்ய பிறகு பஞ்சாயத்து......எவனுக்கு மதம் மற்றும் ஜாதி வெறி என்று திருச்சி திருட்டு தி மு க திராவிடனிடம் கேட்கவும் ...

    • சந்திரசேகர் -

      ஆம் நீங்கள் சொல்வது உண்மை.கடவுள் எல்லாவற்றையும் மனிதனுக்கு கொடுத்தார்.நீயே தனித்து இயங்கு என்பதற்காகா மூளையும் கொடுத்தார்.மனிதனை சுய முடிவெடுக்க வைத்தார். ஆனால் மனிதன் இன்று சுயநலமிக்கவனாய் எங்கே தனக்கு லாபம் கிடைக்கும் என்ன திருட்டு தனம் செய்தாவது தான் மட்டும் முன்னேற வேண்டும் என்கிற உள்ளம் மனிதடத்தில் வந்து விட்டதால் கடவுள் வெளியேறி விட்டார்.இனி நன்மைக்கும் தீமைக்கும் மனிதனே பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வாரா. சுயநலமிக்க உலகத்தில் கடவுள் கூட இல்லையென்றே சொல்வார்கள்

  • Samaniyan - Chennai ,இந்தியா

    Let Corona allow this to happen. The situation is very bad

  • Azhagan Azhagan - Chennai,இந்தியா

    இனி பெரும் சவால்கள் காத்து இருக்கிறது. எதிர் கட்சியாக இருந்த பொது ஆளும் கட்சியை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இன்று பதில் இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா கோர தாண்டவம் ஆடுகிறது அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும். முன்ன மாதிரி ஆட்டய போடா முடியாது.. அறிவித்த இலவசங்களலெல்லாம் கொடுத்தாக வேண்டும். 10 வருசமா காஞ்சி கிடக்குற கட்சிக்காரகள் சும்மா இருக்க மாட்டார்கள்.. மக்களிடம் ஆட்டய போட ஆரம்பிப்பார்கள்.. தமிழர்கள் கொள்ளிக்கட்டையை தலை சொரிய எடுத்துவிட்டார்கள்... அனுபவித்துத்தான் ஆகவேண்டும்

  • வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா

    என்னது சுப்ரமணிய சாமி தான் தமிழ் நாடு கவர்னரா?....ஆ ஆ

    • ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" - செந்தமிழ்நாடு ,இந்தியா

      கதறுடா திரட்டு 100 id

  • வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா

    அரசாங்க சொத்தை சுரண்டி தின்கிற கட்சிக்கு எல்லாம் ஒட்டு போடீங்களே மக்கா...இன்னும் அஞ்சி வருஷம் அழுவுங்கடா

    • Bala - Chennai,இந்தியா

      ஆமாம் ஜெயலலிதா மாதிரி ஒரு ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு ஊட்டி தேயிலை தோட்டம் 1000 ஏக்கர் வாங்கினார். கடைசியில் ஜெயிலுக்கு போனார். எடப்பாடி லட்சணம் இன்னும் ஒரு வருடத்தில் தெரியும்

  • Tamilnesan - Muscat,ஓமன்

    என்னப்பா அங்கே சத்தம்...மதுரையிலிருந்து அழகிரி ஒண்ணுமில்ல மாமா, ச்சும்மா குழந்தைங்க பட்டாசு வெடிக்குது. முதலமைச்சர், பதவி பிரமாணம் போன்ற சத்தம் வெளியே வந்தா பிச்சுப்புடுவேன்...பிச்சு - அழகிரி.

  • Svs Yaadum oore - chennai,இந்தியா

    //....ஆரூர் ரங் - டெல்லிக்கு அடிமை சேவகம் செய்வதில் திராவிஷத் தலைகள் ......//.....அதான் தூத்துக்குடி ஸ்டெர்லிட் விஷயத்தில் இப்பொதே திருட்டு தி மு க பல்லிளிக்குதே .....தூத்துக்குடியில் தி மு க வெற்றி ....

  • Svs Yaadum oore - chennai,இந்தியா

    திருச்சி மேற்கில் கிறிஸ்துவ மத வெறியன் இனிகோ இருதயராஜ் வெற்றி ...தேவாலயத்தில் மட்டும் வோட்டு கேட்டவன் இவன் ..இவன் நடத்துவது கிறிஸ்துவன் நல்லெண்ண இயக்கமாம் ..அறிவாலயத்தில் நாணயமாக கொடுக்க வேண்டியதை கொடுத்து சீட்டு வாங்கினான் ....இவனை பற்றி திருச்சி தி மு க திராவிடன் அறிவாலயத்தில் புகார் செய்ய பிறகு பஞ்சாயத்து ......இவனுங்கதான் மத வெறியை பற்றி பேசுவானுங்க.....இவனிடம் காசு வாங்கி வோட்டு போட்டவன் திருச்சி மேற்கு ......

    • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

      சிலுவையை வணங்கும் கூட்டம் இனி இவரால் சிலுவையை சுமக்கப்போகிறது ..சிலுவை பரிதாபங்கள்

  • Kannan Krishnan Subramanian -

    நடந்தவை நடந்து போனவைகள் ஆகட்டும். இனியாவது லஞ்சலாவண்யங்கள் இல்லாது தமிழ்நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு நல்லாட்சி புரியவேண்டும்.தனி நபர் துவேஷம் இல்லாமல், தன்மானத்தை இழக்காமல், மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழகத்திற்கு சேவைபுரிய வேண்டுகிறேன்.

  • Svs Yaadum oore - chennai,இந்தியா

    இந்துக்களை, இந்து கோயில்களை பாதுகாத்து கோயில் நிலத்தை சுரண்ட வந்த மோசக்கார கொள்ளைக்கூட்டதை வேலாயுதத்துடன் விரட்டி அடிப்பாரு ...

  • திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா

    போன தேர்தலில் கூட இவர் கடுமையாக உழைத்தார். அதன் பின் இடையில் ஆண்ட கட்சிக்குள் சிக்கல் வந்த பொழுது "இந்த இடத்தில் கலைஞர்" இருந்த்திருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார், இவர் அதற்கான திறமை படைத்தவர் அல்ல என்ற குற்றச்சாட்டுக்கள் நிறைய எழுந்தன. ஆனால் என்னவோ இவர் அரசை பறிக்க எண்ணவில்லை , எதனால் என்று தெரியவில்லை , ஏனென்றால் மத்திய அரசின் அழுத்தம் அதிகமாக இருக்கலாம் என்று நினைத்திருக்கலாம் .மீண்டும் இந்த முறை கடின முயற்சி , அதுவும் கரோனாவால் பலர் இறந்திருக்க தொற்று பரவும் அபாயத்திலும் துணிந்து பல ஊர்களுக்கு பயணம் செய்தார். இது முழுக்க உழைப்பின் பலன் என்பதில் மாற்றமில்லை , என்றாலும் இவருடைய உழைப்புக்கு பலன் தருவது போல் ஆண்டு கொண்டிருந்த கட்சியின் செயல்பாடுகள் , மத்திய அரசின் ஒரு சில திட்டங்கள் தமிழக இயற்கையை பாதித்தது போல் இருந்தது, அவர்கள் மிகப்பெரிய ஆளுமையை வேண்டாமென மறுத்தது போன்ற பல விஷயங்கள் உதவியுள்ளன . அதனால் இவர்கள் சுதாரித்து தமிழகத்துக்கு பாதிப்பு நேரா வண்ணம் அதே நேரத்தில் மத்திய அரசிடம் நட்பு ரீதியில் (கீழ் மட்டுமில்லாமல் ) ஆட்சி செய்யவேண்டும். இருபதாம் வருடம் சொல்லொண்ணா துயரத்தில் இருந்த மக்கள் இருபத்தி ஒன்றிலும் அதை விட மோசமான நிலைமைக்கு போகும் நிலைமையில் இருக்கிறார்கள் . இவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இவர்கள் ஆட்சி நடக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்ப்பார்கள். இவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்குமெனில் அது முழுக்க முழுக்க ஆண்ட கட்சியின் மீது கொண்ட கோபம் என்பதை மறக்காமல் இருந்தால் போதும் . ஆண்ட கட்சியும் மீண்டும் புது பொலிவுடனும் தலைமையுடனும் திரும்ப வரும் வாய்ப்பு இருக்கிறது , அவர்களின் கருத்துக்களையும் எதிர் நோக்க வேண்டியிருக்கும்

  • சீனி - Bangalore,இந்தியா

    ஜீன் 3ம் தேதி வரவிருக்கும் 4000 க்கு, ஜோரா ஒரு வாடி கைதட்டிட்டு போய் வரிசையில நில்லுங்கப்பா.... உங்க வரிப் பணத்தை உங்களுக்கே கொடுக்க பிச்சையெடுக்கவேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    எல்லாம் மாயை தான் என் எண்ணம் யாவும் வீணா??சாதாரணன் நல்லவன் புலம்பல்"கள்". அதிகாலையில் ஒரு சிறிய எண்ணம் தோன்றியது. "கள்"மிகவும் வெற்றி பெற்றது. வெற்றி நடை போடும் அரசுகள்???? வெட்டியாக நடைபோடும் அரசுகள் கீழே தங்க "கள்"ளக் கடத்தல் அரசு வெட்டி நடை "கள்" "குடி" மகன்கள் அரசு வெட்டி நடை "கள்"ளகுடியேறிகள் அரசு வெட்டி நடை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை கும்பிடுபவன் காட்டு மிராண்டி ஆனால் திருவண்ணாமலை கிரி வளம் வருவார்கள் இப்படி சொன்னவர்கள் குழந்தைகள் தேர்தல் முடிவுக்கு முன்பு கோவில் கோவிலாக பிரார்த்தனை அவர்கள் பெண்மக்கள் அதில் ஒருத்தி சொல்லுவாள் ஒரு கல்லை போய் சாமி என்று கொண்டாடுகின்றார்கள் என்று சனியின் அதிசார Retrograde மேற்கு வங்க கேரளா டாஸ்மாக்கினாடு மக்களுக்கு பிச்சை பாத்திரம் வழங்குகின்றது. ஓம் பகவதி பீட்சாம் தேஹி

    • E Mariappan - ,

      நீ என்னடா சொல்ல வருகிறாய். கடவுளை வைத்து வியாபாரம் செய்யும் கட்சிகளுக்கு கடவுள் தக்க தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி விட்டார் என்று மன அமைதி கொள்

  • ... - ,

    பதவியேற்ற உடன் #gobackmodi hash tag நிரந்தரமாக முடக்கபடும்...

    • சீனி - Bangalore,இந்தியா

      கோபேக் மோடி - வைக்கோவோட சொத்து. கருப்பு பலூன் - திகவுடையது. நல்லது தான், கோபேக் மோடி தான் பிஜேபிக்கு 4 சீட்டு வெற்றி தந்துள்ளது. அடுத்தவாட்டி 40 சீட்டு பிஜேபிக்கு....

    • திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா

      gobackmodi hash tag இருக்க என்ன அட இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்ல

  • ஆரூர் ரங் -

    டெல்லிக்கு அடிமை சேவகம் செய்வதில் திராவிஷத் தலைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி. ஆனால் வெளியில்😆 தமிழன் தன்மானம் என்று சவடால். கை சுத்தமாக இருந்தால் ஏனிந்த நிலை? சபரீசன் எனும் ஒரு ரீசன் போதும்

  • Srinivas - Chennai,இந்தியா

    கூன்பாண்டி கொள்ளைக்கும்பல் இனிமேல் காசு கொடுப்பானா?

  • தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா

    வாழ்த்துக்கள்.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு . அற வழியில் ஆட்சி நடத்துங்கள். எல்லா தரப்பினரையும் ஒருங்கிணைத்து செல்லுங்கள். பழி வாங்கும் படலம் வேண்டவே வேண்டாம். . டாஸ்மாக் விற்பனை இரண்டே நாட்களில் பல நூறு கோடிகளை தாண்டியுள்ளது. தமிழர்கள் எவ்வளவு சீரழிந்துள்ளார்கள் என்பதற்கு இதை விட சாட்சி இல்லை. தமிழகத்தின் நிதி ஆதராத்தை , டாஸ்மாக் விட்டு எப்படி பெருக்கலாம் என்று சிந்தித்து முடிவெடுங்கள். மத்திய அரசுடன் சுமூக உறவு இருந்தால் தான், பல நல்ல திட்டங்களை செயல் படுத்த முடியும் என்பதையும் உணர்ந்து செயலாற்றுங்கள்.. இறுதியாக, இலவச திட்டங்களுக்கு அடிமையாக உள்ள தமிழர்களை மீட்டெழுப்பதும், அதன் மூலம், தமிழர்கள் என்றாலே, அலட்சியமாக பார்க்கும் மற்ற மாநிலத்தவர்க்கும், தமிழனின் பெருமையை உணர வையுங்கள்.

  • ஆரூர் ரங் -

    ஏழாம் தேதி தான் ஏழரைக்கு நல்ல நாள் போலிருக்கு நமக்குத்தான் வெறுப்பு. ஓட்டுப் போட்ட முட்டாள்களால் பாதிப்பு .🤔 கருணா சொன்னது போல தமிழர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள்🙃

  • Rameeparithi - Bangalore,இந்தியா

    தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யட்டும் மாதம் 5000 ரூபாய் கொடுக்க கூறியதை நிறைவேறட்டும்

  • Nagercoil Suresh - India,இந்தியா

    சீன வைரசுக்கு சிறப்பாக செயல்படும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் துறையில் அதிகாரி சைலேந்திரபாபு ஆகியோருக்கு முக்கியத்தும் கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...

Advertisement