dinamalar telegram
Advertisement

முழு முடக்கம் அமல்படுத்த :உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Share
Tamil News
புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.


ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் அதை வழக்காக பதிவு செய்து விசாரித்தது.இந்த வழக்கில், நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு: கொரோனா வைரஸ், மேலும் பரவுவதை தடுக்க எடுத்துள்ள மற்றும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்.
தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள, மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம். தேவைப்பட்டால், முழு முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தலாம்.அதே நேரத்தில், ஏழை, எளிய மக்களின் பொருளாதார சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். முழு முடக்கத்தை அறிவிப்பதற்கு முன், அவர்களுக்கு தேவையான வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    நீதிபதிகள் உள்ளே இருந்து தகவல்கள் அடிப்படையில் ..வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு சொல்ல இது வழக்கு அல்ல .. மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை உணர்ந்து செயல்படுவது அறிவார்ந்த மாண்பு .. ஊரடங்கு என்பது ஏழை எளிய நடுத்தர பணக்காரர்கள் உட்பட 90 % சதவீதத்தினர் பாதிப்புக்குள்ளாக்குவர் .. மக்களுக்கு அறிவார்ந்த வகையில் நிலையை உணர்த்தி அதன்படி செயல்படச்செய்வதே நல்லது .. மாறாக இப்படி ஊரடங்கு என்று சொல்லி மக்களை கூடுதலாக கடைகளுக்கு வரவழைப்பது போன்ற நிலைகளால் மேலும் தொற்றுப்பரவலாம் .. ஆக நிலை உணர்ந்து செயல்பட உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    இப்போது தான் இழந்த பொருளாதாரம் மீண்டு வருகிறது முழு ஊரடங்கு போட்டால் உங்களுக்கு எல்லாம் சம்பளம் சலுகைகள் கொடுக்க பணம் இருக்காது ஒரு வருடத்துக்கு சம்பளம் சலுகைகள் வாங்காமல் வேல செய்ய நீங்க தயாரா நன்கு யோசித்து விஷயம் தெரிந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுங்கள்

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    முழு முடக்கத்தை அமல் படுத்திவிடலாம். ஆனால், நீதிபதிகள் யாருக்கும் சம்பளம் கிடையாது. அவற்றை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துவிடலாம். சரியா?

  • vbs manian - hyderabad,இந்தியா

    முழு ஊரடங்கு வேண்டாம். உடனே எதிர் காட்சிகள் புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினையை கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடக்கும்.. மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இதே நீதிமன்றம் வசைபாடும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஏற்கனவே இந்தியா முழுவதும் மொதல்ல போட்ட லாக் டவுன்ல மத்திய மாநில அரசாங்கம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை ,மக்களை மக்களாக மதிக்கவில்லை பலர் பசி பட்டினியால் ,கடன் தொல்லையால்,தொழில் நசிவினால் செத்தாங்க ,ஆனால் அந்த மாதிரி இந்த முறை நடந்தால் மத்திய மாநில அரசுகளின் பொறுப்பற்ற மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அறிவுறுத்தவேண்டும் மேலும் மீறினால் டிஸ்மிஸ் செய்யவும் உச்ச நீதிமன்றம் தயங்காது என்று மிக மிகக் கடுமையான எச்சரிக்கை விடுங்க மை லார்ட் போன லாக் டவுன்ல மக்கள் நாய் படாத பாடு பட்டுவிட்டார்கள் ,பொறுப்பற்ற அரசாங்கத்தை உச்சநீதிமன்றம்தான் கண்டிக்க வேண்டும் மை லார்ட் போன லாக் டவுன்ல மக்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் நாய் படாத பாடு பட்டுவிட்டார்கள் ,கொரோனா வியாதி காரணமாக ஏற்பட்ட கஷ்ட நஷ்டம் பொது மக்களுக்கு கொஞ்ச நஞ்சமல்ல ,அதே போல கொரோனா வியாதியினால் இறந்தால் மக்களுக்கு போதுமான நஷ்ட ஈடும் மத்திய மாநில அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தாங்க மை லார்ட் . ஜி.எஸ்.ராஜன் சென்னை

Advertisement