dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன்: தொடர்ந்து இரண்டாவது முறையாக, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த வெற்றி மக்களுக்கானது. எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. கொரோனாவை எதிர்கொள்ள நாம் அனைவரும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றிணைய வேண்டும்; கேரளாவை முன்னேற்ற பாதையில் நடத்திச் செல்ல வேண்டும்.


'டவுட்' தனபாலு: கேரளாவில் இதுவரை இல்லாத சாதனையாக, கம்யூ., கூட்டணி ஆட்சி, பதவியை தக்க வைத்துள்ளது. இது, உங்களின் அசாத்திய உழைப்பால் கிடைத்த வெற்றி தான் என்பதில், 'டவுட்' இல்லை. நாட்டில் எங்குமே, கம்யூ.,க்கள் ஆட்சியில் இல்லாத நேரத்தில், பா.ஜ., மற்றும் காங்கிரசை பின்னுக்கு தள்ளி, வெற்றி பெற்றுள்ளது உண்மையிலேயே சாதனை தான்!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்
: தமிழகத்தில், ஐந்து முறை ஆட்சி செலுத்திய கருணாநிதி வாழ்ந்த காலத்திலேயே, தி.மு.க., ஆட்சியை மலர வைக்க வேண்டும் என, நினைத்தோம். ஆனால், காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன், ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான், மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றி. கட்சி மீது வீசப்பட்ட அனைத்து அவதுாறுகளையும், தங்களது ஓட்டுகளால் ஓரங்கட்டிய, மொத்த மக்களுக்கும் நன்றி.


'டவுட்' தனபாலு: கருணாநிதி இருந்திருந்தால், 'வாராது வந்த மாமணிபோல வந்துள்ள இந்த வெற்றிக்கு பாத்திரமான கழக கண்மணிகளுக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...' என கூறியிருப்பார். முதல்வராகி விட வேண்டும் என, பல ஆண்டுகளாக துடித்த நீங்கள், கிடைத்த வாய்ப்பை விறுப்பு, வெறுப்பின்றி பயன்படுத்துவீர்கள் என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்'டே இல்லை!


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:
திராவிட இயக்கத்தை, நம் அன்னை தமிழை, கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன், தமிழகத்திற்கு விடிவு பிறந்துள்ளது. வெற்றியை தவிர வேறு இல்லை என, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வின் பொற்கால ஆட்சி மலரும் நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். வெற்றிகள் தொடரட்டும்.


'டவுட்' தனபாலு: முதல்வராக உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, இப்போது மனதார பாராட்டுவது போல, வரும் காலங்களிலும் நீங்கள் பாராட்ட வேண்டும். ஏனெனில், நீண்ட காலமாகவே, ஆளும் அரசுகளுக்கு எதிராக எதிர்ப்பு அரசியல் செய்து வந்துள்ள நீங்கள், இம்முறை மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளீர்களோ என்ற, 'டவுட்' சமீபத்திய உங்கள் உடல்நிலை மற்றும் நடவடிக்கைகளால் வருகிறது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    தினகரன் ஓட்டுக்களை பிரித்ததால் தான் aiadmk தோல்வி அடைந்து dmk வெற்றி பெற்றுள்ளது என்பதை ஸ்டாலின் மறக்கக்கூடாது தினகரன் aiadmk வில் இணைந்து விட்டால் மீண்டும் அக்கட்சி வலுவடைந்து விடும்

Advertisement