இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: ஒவ்வொருவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு தங்களையும், சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும். அவசியமற்ற பயணங்களை தவிர்த்திடுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், சத்தான இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள். மருந்தால் மட்டுமல்ல உணவு பொருளாலும் நோய் தொற்றில் இருந்து நம்மை காத்திடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வராது என்ற அலட்சியம் யாருக்கும் இருக்க கூடாது. கொரோனா 2வது அலை மிக மிக மோசமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்ற செய்திகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசிகள் இல்லை. முதல் அலை வந்தபோது அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. அந்த தவறில் இருந்து பாடம் கற்காமல் அதைவிட பெரிய தவறை 2வது அலையின்போதும் செய்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பார்லிமெண்ட் நிலைக்குழு எச்சரித்தபோதும், மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. 2வது அலை மக்களை தாக்கியபோது கூட ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி போன்றவற்றை ஏற்றுமதி செய்தது. இவ்வளவு மோசமான சூழலிலும் மத்திய அரசு, மாநில அரசு, தனியாருக்கு என தடுப்பூசிகளுக்கு மூன்றுவிதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே தேசம், ஒரே ரேஷன், ஒரே மதம், ஒரே மொழி என பேசும் பா.ஜ., ஆட்சியில் தடுப்பூசிக்கு மட்டும் மூன்று விதமான விலைகள். நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசம் என பிரதமர் அறிவித்து அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்க வலியுறுத்தினோம். எப்போதும் தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
அரசு தரப்பில் ஆக்சிஜன், தடுப்பூசிகளின் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்தாவிட்டாலும் விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும். மக்கள் உயிரை காப்பாற்றுவதில் அலட்சியம் வேண்டாம். மக்களை காப்பாற்றுங்கள் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் நலன் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (221)
கொஞ்சநாள் முன்னாடி மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் கூட்டத்தை கூட்டி கொரோன பரவ நீங்களும்,மற்ற தலைவர்களும் ஒரு காரணம் என்பதை மறந்து அறிக்கை விடறீங்களே ...... அது சரி அறிக்கை விடறது நமக்கு என்ன புதுசா .....?
இதைவிட ஒரு தலைவர் தெளிவாக சொல்லமுடியாது. அவசர காலங்களிலும் தன்னுடைய பொய்யான பெருமைகளை தம்பட்டம் நடித்துக்கொண்டிருக்கும் கையாலாகாத அரசுகளிடமிருந்து நாட்டை காத்திட வேண்டும்
ஹாஹாஹா தேசத்துரோக மூர்க்கனுங்களுக்காக தெருத்தெருவா கால்கடுக்க கையெழுத்து நடத்துன துரோகியாச்சே
(எப்போதும் தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள் இது யார்க்கு) சத்தியமா உன்னோட தேர்தல் பிரச்சார கூட்டங்களால் கொரோனா 2வது அலை வரவில்லையாம். கொரோனவை பரப்பி விட்டுவிட்டு மனிதாபிமான அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்க வலியுறுத்தினோம்.இப்ப வந்து மக்களோட உயிரை வச்சு நல்ல அரசியல் பண்ணி விளையாடு.
வருங்கால முதல்வரே என்று ஸ்டாலினை நக்கல் செய்தாங்க ......ஆனால் இப்போ நிஜமாகவே வந்துட்டாராய்யா வந்துட்டாரு