dinamalar telegram
Advertisement

ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமிகடிதம்

Share
Tamil News
சென்னை:'தமிழகத்தில் தேவை அதிகம் இருப்பதால், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு, ஆக்சிஜன் அனுப்ப பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி., கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, 450 டன்னை எட்டும் என, தெரிகிறது. இது, தமிழகத்தின் உற்பத்தி திறனான, 400 டன்னை விட அதிகம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, 58 ஆயிரம் பேர் மட்டுமே, ஒரே நேரத்தில், கொரோனா வால் பாதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்துள்ளதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

நடவடிக்கை



ஆக்சிஜனை தடையின்றி கொடுக்க, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.தமிழகத்தின் தற்போதைய ஆக்சிஜன் தேவை, 310 டன்னாக உள்ள நிலையில், தேசிய மருத்துவ ஆக்சிஜன் பங்கீட்டில், தமிழகத்திற்கு, 220 டன் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. தவறான கணக்கீட்டின் அடிப்படையில், குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து, 80 டன் திரவ ஆக்சிஜன், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் உற்பத்தியாகும் ஆக்சிஜன், சென்னை மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமாகாது. எனவே, இந்த தவறு திருத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு ஆதரவளிக்க, தமிழகம் எப்போதும் தயாராகவே உள்ளது.

ஆனால், தமிழகத்தின் தேவை அதிகமாக உள்ளதால், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, 80 டன் ஆக்சிஜனை, பிற மாநிலங்களுக்கு அனுப்பும் உத்தரவை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பழனிசாமி., கூறியுள்ளார்.

வேதாந்தா நிறுவனத்திற்குஅனுமதி வழங்கப்படுமா?



துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில், தினசரி, 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும்படி, வேதாந்தா நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.எனவே, தமிழக அரசு வறட்டு கவுரவம் பார்க்காமல், அவசர நிலை கருதி, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதை, உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தெரிவிக்குமா என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பது மாதிரி காட்டிக் கொள்வோம். நீங்கள் கடிதத்தை குப்பை கூடையில் தூக்கிப் போட்டு விட்டு உங்கள் இஷ்டம்போல் எது வேண்டுமானாலும் செய்யலாம் எசமான்"

  • vbs manian - hyderabad,இந்தியா

    ஆ ந்தரவும் கர்நாடகாவும் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் என்னாவது .

  • c.k.sundar rao - MYSORE,இந்தியா

    No states or centre will come forward to help T.N. in case any crisis in oxygen is it short supply because each and state have there own problems and T.N. oxygen producing plant will be advised to operate it rather than begoing the states and centre.

  • vbs manian - hyderabad,இந்தியா

    ithu thavaraana munnuthaaranam.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

    தீர்வு ரொம்ப சிம்பிள் ..ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படவேண்டும் ...திருட்டு திமுக ,தேசவிரோத பாதிரிகள் ஒழிக்கப்படவேண்டும் ....

Advertisement