dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாதீங்க! பிரதமர் வேண்டுகோள்

Share
Tamil News
புதுடில்லி:''கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை, யாரும் நம்ப வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வோம். தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து விரைவில் மீள்வோம்,'' என, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு தோறும், வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும், மனதின் குரல் நிகழ்ச்சி வழியாக, நாட்டு மக்களிடம், பிரதமர் மோடி, பேசி வருகிறார். இதன்படி, இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, 76வது, மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

நம் பொறுமையையும், திறமையையும் வேதனையில் ஆழ்த்தி, வலியை தாங்குவோமா என, கொரோனா தொற்று சோதித்து வருகிறது. இந்த கடினமான நேரத்தில், உங்களுடன் பேசுகிறேன். நம் அன்புக்குரியவர்கள், நெருக்கமானவர்கள் பலரை, இந்த கொரோனாவில் இழந்துள்ளோம்.

கொரோனாவின் முதல் அலையை, வெற்றிகரமாக கையாண்டு, உலகளவில், நம்பிக்கையும், மரியாதையையும் அதிகரித்த நிலையில், இரண்டாவது அலை, நம்மை உலுக்கி வருகிறது. இந்த இரண்டாவது அலையை எதிர்கொள்ள, டாக்டர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள், நிபுணர்கள் ஆகியோருடன், தொடர்ந்து ஆலோசித்து வருகிறேன்.

அனுபவம்



நம் சுகாதார பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள், கொரோனாவுக்கு எதிரான பெரிய போரை நடத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக, இந்த பெருந்தொற்று குறித்த மிகப்பெரிய அனுபவங்களை, அவர்கள் பெற்றுள்ளனர். விரைவில் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வோம் என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பெருந்தொற்றை வெற்றிகரமாக வென்று, விரைவில் மீள்வோம் என்ற நம்பிக்கை, எனக்கும் உள்ளது. அது தான், நம் குறிக்கோள்.

கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள, மாநில அரசுகள் எடுத்துள்ள முயற்சிகளை முன்னெடுத்து செல்ல, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசி குறித்து தவறாக செய்யப் படும் பிரசாரத்தில், மக்கள் சிக்கிவிடக் கூடாது, வதந்திகளை நம்பி விடக்கூடாது என, கேட்டுக் கொள்கிறேன். மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை, மத்திய அரசு இலவசமாக அனுப்பி வருவது, உங்கள் அனைவருக்கும் தெரியும். இதனால், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்.

வரும், 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கொரோனா தொற்று பற்றிய தகவல்களை, நம்பகத்தன்மையான தளங்கள், மனிதர்களிடம் இருந்து பெற வேண்டும். டாக்டர்களை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு, ஆலோசனைகள், அறிவுரைகளை பெற வேண்டும். டாக்டர்கள் பலர் பொறுப்புடன், சமூக வலைதளத்தில் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆலோசனைகளை வழங்குகின்றனர்; இதை, பாராட்டுகிறேன்.

பாராட்டு



மத்திய அரசின் இலவச தடுப்பூசி திட்டம், எதிர்காலத்திலும் நீட்டிக்கப்படும். இந்த திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றனர்; அவர்களுக்கு என் பாராட்டு. வரும் நாட்களில், புனித ரமலான் பண்டிகை, புத்த பூர்ணிமா, குருதேஜ் பகதுாரின், 400-வது பிறந்த நாள் ஆகியவற்றை கொண்டாட உள்ளோம்.

நம் கடமையை சரியாக செய்வோம். நாம் நேர்மையாக இருந்தால், கொரோனாவிலிருந்து விரைவில் வெளியே வருவோம் என்பதை, இந்த புனித நாட்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர்களிடம் ஆலோசனை



'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நேற்று, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த டாக்டர் சஷாங்க், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த டாக்டர் நாவீத்ஷா ஆகியோருடன், பிரதமர் கலந்துரையாடினார்.கொரோனா ஒழிப்பு தொடர்பாகவும், தடுப்பு மருந்து குறித்தும், பிரதமர் கேட்ட கேள்விக்கு, டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.'முதல் அலையைவிட, இரண்டாவது அலையின் பரவல் தீவிரமாக உள்ளது. அதேபோல், இரண்டாவது அலையில், விரைவில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால், இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தலாம்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். பெங்களூருவை சேர்ந்த நர்ஸ் சுராகா, சத்தீஸ்கரைச் சேர்ந்த நர்ஸ் பாவா ஆகியோருடனும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கொரோனா நோயாளி ஒருவருடன், மோடி பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

  • Krishnan - Chennai,இந்தியா

    My family and myself all got vaccinated. After seeing us many of my relatives also got their vaccinations. Vaccine is not the cure or it will not avoid us getting COVID... But it will help prevent life threatening impacts if we get COVID.

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    The pandemic is guaranteed to expose leaders who undermine truth, native realities, ostracize experts and scientists and refuse to take precautions to keep the public safe. Earlier this month for instance, Modi boasted of huge rally crowds ahead of elections in West Bengal. His hubris in the face of the virus recalls Trump's refusal to give up rallies last year at which he boasted the virus was being driven out even as his crowds contributed to a building wave of lethal infections that winter. their negligence exposed may not deter the truth-twisting populist leaders inspired by Modi (who is already spoiling for a comeback). Populism will find fertile soil in the economic and social detritus left in the pandemic's wake. But when leaders prioritize their political image over public health, millions of people suffer.

  • அப்பாவி - coimbatore,இந்தியா

    வதந்திகளை, யாரும் நம்ப வேண்டாம்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    நல்லதோர் வீணையை செய்தது யாரு? ஆறம் இல்லாத கோமாளியா ?

  • sankaseshan - mumbai,இந்தியா

    மக்களை பயப்படுத்துவதை நிறுத்தி கொள்ளணும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கமெண்ட் போடுங்கள் இதைத்தான் PM செயல் படுத்துகிறார் சொல்லுகிறார் .

Advertisement