dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசி செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

Share
Tamil News
மாமல்லபுரம் - மாவட்டத்தில், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்த, செங்கை கலெக்டர் ஜான்லுாயிஸ் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இப்பாதிப்பை தவிர்க்க, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்த, அரசு அறிவுறுத்தி உள்ளது.சதுரங்கப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார மையம் சார்பில், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 200 பேருக்கு மேல், தடுப்பூசி செலுத்தப்பட்டது. கல்பாக்கம், அரசு போக்குவரத்து பணிமனையில் நடந்த முகாமை, மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் ஆய்வு செய்தார்.மேலும், 'கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படாது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி செலுத்த வேண்டும். சுகாதார துறையினர், பொதுமக்களை தடுப்பூசி செலுத்த, ஊக்கப்படுத்த வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்' என, மருத்துவ குழுவினரிடம், கலெக்டர் அறிவுறுத்தினார்.கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், அந்தந்த தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும், கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், முக கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • நான் -

    இரண்டாவது ஊரடங்கு வருமா...? வராதா...?

Advertisement