dinamalar telegram
Advertisement

12 ஆயிரம் படுக்கைகள் தயார்!; கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை 200 வார்டுகளிலும் கண்காணிப்பு குழு

Share
Tamil News
சென்னை,--சென்னையில், கொரோனாவை கட்டுப்படுத்த, வார்டு வாரியாக, 'மைக்ரோ லெவல் ஆபிசர்ஸ்' குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆயிரம் படுக்கைகளுடன், கொரோனா கவனிப்பு சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, வார்டு வாரியாக, உதவி பொறியாளர் தலைமையில், தொற்று தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மீண்டும் குழுஇந்த குழுவில், சுகாதார ஆய்வாளர், போலீசார், வருவாய் அதிகாரிகள் என, பலர் இடம் பெற்றுள்ளனர்.இவர்களுடன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அம்மா மாளிகையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் அதிகரித்து வரும் தொற்றை தடுக்க, 2020ல் செயல்படுத்தப்பட்டு வந்த, 'மைக்ரோ லெவல் ஆபிசர்ஸ்' குழு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 200 வார்டுகளிலும், அந்தந்த உதவி பொறியாளர் தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், மக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து, தொற்று தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வர். குறிப்பாக, மார்க்கெட், இறைச்சிக் கூடங்கள், டாஸ்மாக் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூடாமல், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். மேலும், தொற்று கண்டறியப்படும் நபருடன், உடனிருந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபடுவர். இதற்காக, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களது மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரிப்பர்.உத்தரவுமேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 12 ஆயிரம் களப்பணியாளர்கள், 6,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு, ஆறு மாதம் வரை, பணி வழங்கப்படும் என, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பு கண்டறியப்படும் பகுதியில் உள்ளவர்களை, மருத்துவமனை அல்லது கொரோனா கவனிப்பு சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்ல, வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக, ஷேர் ஆட்டோ அல்லது ஆட்டோக்கள், குறிப்பிட்ட மாத வாடகை அடிப்படையில் எடுக்கப்படும். இதுபோன்ற வசதிகளால், மற்றவர்களுக்கு தொற்று பரவுதல் தடுக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு காத்திருக்காமல், உடனடி சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், களப்பணியாளர்கள் வாயிலாக, 45 வயது மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும்படி, வீடு வீடாக சென்று அறிவுறுத்தப்படும்.கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும், இந்தாண்டும் மேற்கொண்டு, தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கொரோனா கவனிப்பு சிகிச்சை மையம்சென்னையில், 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா கவனிப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லுாரிகள் என, 15 இடங்களில் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு சில இடங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மற்றவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதன் விபரம்:இடம் -- படுக்கை எண்ணிக்கைஅத்திப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு -- 4,500வேலம்மாள் பொறியியல் கல்லுாரி -- 390டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லுாரி -- 230பாரதி மகளிர் கல்லுாரி -- 350விக்டோரியா விடுதி, மாநில கல்லுாரி -- 570ஜவஹர் பொறியியல் கல்லுாரி -- 300என்.எஸ்.டி.ஐ., கிண்டி -- 122அண்ணா பல்கலை -- 1,500சென்னை ஐ.ஐ.டி., -- 820குருநானக் கல்லுாரி -- 560சென்னை பல்கலை -- 900ஜெருசலேம் பொறியியல் கல்லுாரி -- 500ஜோசப் பொறியியல் கல்லுாரி -- 700முகமது சதக் நர்சிங் கல்லுாரி -- 600மொத்தம் -- 12,042அந்தமான் பயணிக்கு கொரோனாசென்னையிலிருந்து, அந்தமான் செல்லும், 'கோ ஏர்' விமானம், நேற்று காலை, 8:15 மணிக்கு, புறப்பட தயாராக இருந்தது. அப்போது, சென்னையில் கல்லுாரியில் படிக்கும், அந்தமானைச் சேர்ந்த, 24 வயது மாணவர் ஒருவர், அந்த விமானத்தில் செல்ல வந்தார். அந்த மாணவரின், மருத்துவ சான்றிதழை, விமான நிலைய அதிகாரிகள் பார்த்தபோது, அவருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது தெரிந்தது. உடனடியாக, அந்த மாணவரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement