dinamalar telegram
Advertisement

45 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

Share
Tamil News
கடலுார்; கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி முன்னிலை வகித்தார். கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார்.கூட்டத்தில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார். அப்போது, தினசரி பரிசோதனை, தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினார்.பின்னர், நிருபர்களிடம் கூறுகையில், 'அனைவரும் மூக்கை மூடியபடி முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்.தொற்று பாதித்தோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையம் செயல்படுத்தப்படும்' என்றார்.பின்னர், விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை இறக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகளிடம் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள், அவர்களுக்கு முக கவசம் வழங்கினர்.சப் கலெக்டர் பிரவீன்குமார், தலைமை மருத்துவர் எழில், தாசில்தார் சிவக்குமார், மூத்த மருத்துவர்கள் சாமிநாதன், குலோத்துங்கசோழன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement