dinamalar telegram
Advertisement

எச்சரிக்கை:  கொரோனா தடுப்பு நடவடிக்கையை வலியுறுத்தி...வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சி கூட்ட அரங்கில் கமிஷனர் குமரன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரிமளா, விழிப்புணர்வு பரப்புரையாளர் ராம்குமார். அனைத்து வணிகர் சங்கத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் ஜெயக்குமார், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஸ்ரீதர், பழனி, இன்பராஜ், நகர நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சுபாகரன், நகர மளிகை வியாபாரிகள் சங்கம் கோவர்த்தனன், ஓட்டல் உரிமையாளர் கோவிந்தன், நுகர்வோர் சங்கம் அருண் கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கள்ளக்குறிச்சியில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள அடிக்கடி கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி தியேட்டர்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்களிலும் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதேபோல் சமுதாயம், விளையாட்டு, அரசியல், கல்வி நிலையங்கள், கலாசார நிகழ்வுகளில் 200 பேர், திருமண மண்டபங்களில் 100 பேர், இறுதி சடங்கிற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும், டாக்சியில் மூன்று பேர், ஆட்டோவில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.தியேட்டர்களில் கிருமி நாசினி கொண்டு துாய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நகர பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற வணிக நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க செய்வோம்.

ஆனால், சில நேரங்களில் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அத்தருணத்தில் அதிகாரிகள் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதற்கு நகராட்சி கமிஷனர் குமரன், வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், தளர்வு அளிக்க முடியாது என்று கூறி விதிமுறைகளை கடைபிடிக்கவில்லையெனில் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement