யுகாதி பண்டிகையையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலனை தெரிவித்தனர்.அதன் விபரம்:புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால், நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும்; பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும்; விவசாயிகள் ஏற்றம் பெறுவர்; புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது.

கடந்தாண்டை போன்று, நடப்பாண்டும் புதுப்புது, 'வைரஸ்'உருவாகும்; கால்நடைகளுக்கும் வியாதிகள்ஏற்படும்; மருத்துவதுறையில் பல சாதனைகள் ஏற்பட்டு, வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள்கிடைக்கும்.கல்வி துறையில், உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும்; அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும்; இந்தாண்டில், 12 புயல்கள் உருவாகும்.இவற்றில் ஒன்பது, இந்தியாவை சுற்றி தாக்கும்; புயல் வெள்ளத்தால், சென்னை மிதக்கும்.இப்படி கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள்கூறினர்.
வாசகர் கருத்து (196)
"பிலவ" ஆண்டு பஞ்சாங்கத்தின்படி "தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது" ன்னா இப்போ பதவியிலே இருக்குறவா எல்லாம் பெர்மனெண்ட் சீப் மின்ஸ்டர், பிரைம் மினிஸ்டர் ஆயிட்டாளா ?? சர்வாதிகாரி ஆண்டுன்னு சொல்லுங்கோ.. ஆனா ஒரே ஒரு டவுட்டு 1961 ஆம் ஆண்டு கூட "பிலவ" ஆண்டு தான்.. 60 வருட சுழற்சி.. அப்போ நேருன்னா பிரைம் மினிஸ்டரா இன்னமும் இருந்திருக்கணும். காமராஜர் ஆட்சியோன்னோ தமிழ்நாட்டிலே நடந்துண்டுருக்கணும்?
இரண்டு பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் கமிஷன் வாங்குனது 20 லட்சம் வாக்கு இயந்திரங்களாம். ஆனால் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் தனித் தனியே தேர்தல் கமிஷனுக்கு விற்றது மொத்தம் 40 லட்சம் வாக்கு இயந்திரங்களாம்.. மூன்று பேரிடமும் தனித் தனியாக RTI மூலம் பெற்ற தகவல் இது.. ஆக, பாக்கி இருவது லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே என்று மோடிக்கு, அமீத் ஷா கூட்டத்துக்கு தெரிந்துள்ளது. மக்கள் வாக்களிப்பது ஒரிஜினலா இல்லை மோடியின் போலியா என்று தெரியாது. பாக்கி 20 லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே என்று தேர்தல் ஆணையம் கவலைப்படவில்லை.. அந்த மிச்ச 20 லட்ச வாகு இயந்திரங்களை எங்கேன்னு இந்த ஜோதிடமோ, பஞ்சங்கமோ கண்டுபிடிச்சி கொடுக்குமா ??
தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் எவரும் கூட்டம் சேரமாட்டார்கள்.குரானா வுக்கும் வேலை குறைந்து கைலாசா பக்கம் போய்விடும்.
சென்னை வெள்ளத்தில் மீண்டும் மிதக்கும் என்றால் , தற்போதைய ஆட்சி தான் மீண்டும் தொடரும். மொத்தத்தில் நல்ல காலம் பிறக்க இல்லை . கடவுளே
14.4.21 ல் அதிமுக ஆட்சி இருந்தது அது தொடரும் என சொன்ன பஞ்சாங்கம் பொயாயாகி விட்டதே