dinamalar telegram
Advertisement

தடுப்பூசி திருவிழா துவங்கியது: மக்களுக்கு பிரதமரின் 4 வேண்டுகோள்கள்

Share
புதுடில்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா துவங்கியது. பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.
அதேநேரத்தில், பொது மக்களுக்கு பிரதமர் மோடி 4 வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் அறிவுரைப்படி இன்று(ஏப்.,11) முதல் ஏப்., 14 வரை 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் தகுதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்து இருந்தார். மருத்துவமனைகள், தடுப்பூசி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.

வேண்டுகோள்



தடுப்பூசி திருவிழா தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், நாம் இன்று தடுப்பூசி திருவிழாவை துவங்குகிறோம். இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு நான்கு விஷயங்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
*தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்.
* கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுங்கள்,
*முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.
* தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றுங்கள் என தெரிவித்து உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • ஆப்பு -

    திருவிழாவாம்.... திருவிழா....தடுப்பூசி... திருவிழா...கொரோனாவை... பரப்புனவங்க....கொண்டாடும்... திருவிழா...எல்லோரும்... வாங்க...தடுப்பூசி... எடுங்க...

  • Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா

    பொருத்தமான சரியான வேண்டுகோள்களாக இருக்கும். பகிரலாம் எனப் பார்த்தால் தொடர்பில்லாமல் உளறிஇருக்கிறாரே தேர்தல் முடிவுகள் அவரைக் கலக்கிவிட்டனவோ? முதலில் தடுப்பூசி வரம்பிற்குள் வருபவர்கள் அனைவரும் அஞ்சாமல் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இருக்க வேண்டாமா? உங்கள் குடும்பத்திலும் உறவு வட்டத்திலும் நட்பு வட்டத்திலும் தகுதி உடையவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். இவைபோல் தடுப்பூசி தொர்பாக ஒன்றும் சொல்லவில்லையே. தடுப்பூசித்திருவிழா என்பதை மறந்து விட்டாரோ அன்புடன் இலக்குவனார்_திருவள்ளுவன், தமிழே_விழிதமிழா_ விழி எழுத்தைக்_காப்போம் மொழியைக்காப்போம் இனத்தைக்காப்போம்

  • Ram Kannan - California,யூ.எஸ்.ஏ

    Be Happy 2nd Chance to collect more fund for PM care

  • HSR - MUMBAI,இந்தியா

    கெஞ்சி கூப்புட்டபோ எவனும் போல..இப்போ மொத்தமா போய் முண்டி அடிச்சிக்க வேண்டியது..இதே வெள்ளையா போச்சி.அவ ஒருத்தன் 65% வெளிநாட்டுல போட்டாச்சு என்கிறான்..65வயசுக்கு மேலேதான் அங்க ஊசியே போடுறான்..இதுகூட தெரியாம எண்ணாத்த அரசியல் பண்ணி கிழிக்கப் போறாங்களோ

  • ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" - செந்தமிழ்நாடு ,இந்தியா

    மோடி அவர்கள் வங்காளத்தில் வோட்டுக்கு பணம் கொடுப்பது போல ஏன் இவர் ஊசி போட்டுக்கொள்ளுகிறவர்களுக்கு பணம் தர கூடாது

    • HSR - MUMBAI,இந்தியா

      செம்ம செம்ம செம்ம ஜோக்குடா.. தீமுக முடியட்டும் தமிழகத்தை பிடித்த இருள் விலகட்டும்...

Advertisement