dinamalar telegram
Advertisement

தொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள்

Share
கடந்த வாரம், ஒரு வணிக நாளிதழின், 6 பக்க இணைப்பு முழுதும் ஒரே விளம்பரம். அடகு வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் ஏலத்துக்கு வந்துள்ள விபரத்தைச் சொல்லும் விளம்பரம் அது. இதேபோன்ற விளம்பரம் ஒன்று, 20 நாட்களுக்கு முன்பும் வெளியானது.கால் சவரன், அரை சவரன் முதற்கொண்டு, 75 சவரன், 100 சவரன் நகை வரை கூட ஏலத்துக்கு வந்துவிட்டன. உரிய தொகை கட்டப்படாமல், ஏன் இவ்வளவு நகைகள் மூழ்கிப் போயின என்று நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்தோரிடம் விசாரித்தோம்.

அவர்கள் தெரிவித்ததாவது:நகைக்கடனில், ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டவேண்டும். அதுபோல் ஐந்து மாதங்கள் வரை வட்டி கட்டவில்லை என்றால், அரசுத் துறை வங்கிகள், அந்த நகைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்துவிடும். தனியார் நிதி, பண்டுகள் போன்றவை, 12 மாதங்கள் வரை காத்திருக்கும். அதற்கு மேல், 3 மாதங்கள் வரை 'கிரேஸ்' அவகாசம் கொடுக்கப்படும். இதற்குள் பலமுறை, நகை உரிமையாளருக்கு விதவிதமான கடிதங்கள், அழைப்புகள் அனுப்பப்படும். வட்டி செலுத்த வேண்டும் என்பது நினைவூட்டப்படும்.அப்படியும் வட்டியைச் செலுத்தவில்லை என்றால் தான், நகைகள் ஏலத்துக்கு வரும். அதாவது, 15 மாத காத்திருப்புக்கு பின்னரே நகைகள் ஏலத்துக்கு வரும்.
கொரோனா ஏற்படுவதற்கு முன்பிருந்தே பலரும் தங்களிடம் இருந்த சிறு சிறு உருப்படிகளைக் கூட அடகு வைத்துவிட்டனர். தங்கத்தின் விலை உயர்ந்ததால், அடகு தொகையும் அதிகமாக கிடைத்தது. அன்றைக்கு அந்தப் பணம் தேவைப்பட்டதால், கூடுதலாக ரொக்கத்தை வாங்கிவிட்டனர்.கொரோனா காலத்தில் பலரால் அசலை மட்டுமல்ல, வட்டியையும் செலுத்த முடியவில்லை. அதுதான் இப்போது ஏலத்துக்கு வந்து நிற்கிறது.

பெரிய வங்கிகள், கடிதங்கள் அனுப்புவார்களே அன்றி, தொடர்ந்து வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு, வட்டியையோ, அசலையோ கட்டுவதற்கு வலியுறுத்தமாட்டார்கள். அதனால் தான், நகைக் கடன் மூழ்கிப் போய்விடுகின்றன. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இது தான் சமூகத்தின் தற்போதைய எதார்த்தம். ஏழை, எளியவர்கள் முதல் தள்ளுவண்டிக்காரர், சிறு கடைக்காரர் வரை எவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பதையே இந்த ஏலத்துக்கு வரும் நகைகள் சொல்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (48)

 • மனுநீதி -

  கடன் வாங்கினால் என்றாவது அதை திருப்பி செலுத்தவேண்டும் என்கிற நிலை ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி வர வேண்டும். தள்ளுபடி செய்வது எல்லாம் பிற தட்டு மக்களுக்கு செய்யும் துரோகம். மேலும், அரசின் செலவீனங்களில் ஒன்றான அரசு ஊழியர்கள் சம்பளத்தை நெறிப்படுத்த வேண்டும். கோரோணா காலங்களில் வேலையே செய்யதவர்களுக்கு ஏழை மக்கள் வரிப்பணத்தில் தாராள சம்பளம் தேவையா? இப்போது கிம்பளமும் கூட பல மடங்கு உயர்ந்து தான் விட்டது. வங்கிகள் இதுபோன்ற காலங்களில் கஷ்டப்படும் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  // தொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள்.. //ஆனால் இந்த நேரத்திலும் பாஜக்கா கட்சி தன்னோட தலைவர் படத்தோட தங்க நாணயங்களை வோட்டுக்கு துட்டு கணக்கில் அள்ளி கொடுத்தாய்ங்க பாருங்க.. எம்புட்டு நல்லவங்க..

 • ஆப்பு -

  இந்த அரசு மக்களால் மக்களுக்காக மக்களிடமிருந்து உருவுவதற்காக உண்டாக்கப்பட்ட அரசு.

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  பெருமுதலாளிகளுக்கு ஐந்து நாட்களில் 60,000 கோடி கடனும், அப்புறம் சில லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் செஞ்சிட்டோம்.. அது போதும்.. இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரம் ஆகிவிடும்.. தங்கம் ஏலம் போனது கூட Debt Instruments என்று GDP வளர்ச்சியில் கணக்கு காட்டிடுவாங்க.. செத்தவன் எல்லாம் ஏழை தானே..

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  பொருளாதாரம் வளர்கிறது.. மக்கள் தங்கத்தை வங்கிகளுக்கு தானம் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள்.. இதெல்லாம் பெருமை தானே சங்கிகளே..

Advertisement