dinamalar telegram
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்., வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு

Share
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், மதுரை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறையாக போட்டியிட்டவர் பி.எஸ்.டபிள்யூ.மாதவராவ். இவருக்கு வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 11) காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரிடம் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் மே 2 ம் தேதி எண்ணப்படும் ஓட்டு எண்ணிக்கையில் அவர் வெற்றிப்பெற்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

இரங்கல்மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவர் அழகிரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (38)

 • ponssasi - chennai,இந்தியா

  வேட்பாளர்களுக்கு பிட்னெஸ் சான்றிதழ் கட்டாயம் அளிக்கப்படவேண்டும், நோயுள்ளவர்கள் சட்டமன்றம் செல்லுவதுவும் இல்லை, எந்த விவாதத்திலும் பங்குபெறுவதுவும் இல்லை, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு வயது வரம்பு 65. ஆக இருக்கும்போது இதற்கு ஏன் வயதும் கல்வித்தகுதியும் நிர்ணயக்கக்கூடாது? மறைந்த வசந்த குமார் தான் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற பேராசையால் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. யார் வீட்டு வரிப்பணம். அதற்காக அரசுக்கு ஏதேனும் அவர் இழப்பீடு கொடுத்தாரா? தேர்தல் கமிஷன் இதை எப்படி அனுமதித்தது. இந்தியாவிற்கு தேர்தல் நடைமுறைக்கு வரும்போது படித்தவர்கள் மிக மிக குறைவு, இன்று நிலை அதுவல்ல. திராவிட ஆட்சியில் வடநாட்டு தலைவர்களையும் உலக தலைவர்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திரும்பி பார்க்கவைத்தவர் ஜெயலலிதா தான். அவரின் ஆங்கில புலமையும் மதிநுட்பமமுமே காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்து நாடாளுமன்றம் சென்று கோலேச்சியவர்கள் சிலரே, அதில் முக்கியமானார்கள் என்று பார்த்தால் இரா. செழியன், வைகோ, ஜெயலலிதா போன்றோரே. மற்றோரெல்லாம் ஊதியம், மருத்துவம், கான்டீன், சுற்றுலா என்று காலத்தை கழித்தவர்கள்தான். ஆனால் ஊதியம், போக்குவரத்து, இதர படிகள் என்று சுமார் 200. கோடிகளுக்கு மேல் அரசு செலவு செய்துள்ளது.

 • Ketheesh Waran - Bangalore,இந்தியா

  ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதா ?

 • Elango - Kovai,இந்தியா

  ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Pannadai Pandian - wuxi,சீனா

   சரி.......

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கொலைகார துரோகிகளுடன் கூட்டணி அமைத்து தான் உயிரிழந்த இடத்திலேயே தனது கட்சிக்காரர் போட்டியிட்டதை ராஜிவ் ஆவி விரும்பவில்லை....

  • Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா

   ஹலோ...எந்த உலகத்துல இருக்கீங்க? ராஜீவ் கொல்லப்பட்டது ஸ்ரீபெரும்புதூர்ல ...

  • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

   அது ஸ்ரீ பெரும்புதூர் அண்ணாச்சி..இது வேற ஊரு ..

  • Raj - Namakkal,சவுதி அரேபியா

   இப்படி ஒரு கருத்தும், அதை ஆதரித்து ஏழு பேர் லைக்கும் ... கண்டிபாக இவர்கள் துக்ளக் படிப்பவர்கள்தான்

 • oce -

  காங்கிரஸின் கெட்ட காலம்.

  • ... -

   காங்கிரசுக்கே கெட்ட காலம்

Advertisement