dinamalar telegram
Advertisement

"நீங்க சொல்றது உண்மையான்னு மே 2ல தெரிஞ்சுடுமே..."

Share
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்துார் தொகுதியில், 60 சதவீத ஓட்டுகள் தான் பதிவாகியுள்ளன. ஆனால், முதல்வர், இ.பி.எஸ்., தொகுதியில், 85 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்தே தெரிகிறது, கொளத்துார் மக்கள் உங்களை நம்பவில்லைன்னு!
- நடிகை காயத்ரி ரகுராம்

'நீங்க சொல்றது உண்மையான்னு, மே, 2ல தெரிஞ்சிடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கைபத்திரிகையாளர் சந்திப்புகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. கேள்விகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அதுவே பிரதமருக்கு அழகு!

- கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி

'இந்த எட்டாண்டுகளாக பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை; அதனால் பத்திரிகைகளுக்கு செய்திகள் வராமல் போயிற்றா...' என, கேட்கத் தோன்றும் வகையில், கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கைமேற்கு வங்கத்தில் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் பருப்பு வேகவில்லை; அங்கு, பா.ஜ., படுதோல்வியை சந்தித்துள்ளது. மீதமிருக்கும், ஐந்து கட்ட தேர்தல்களில், மக்கள் மனதை மாற்ற, இந்த மூவரும் கடும் பிரயாசைப் படுகின்றனர்.
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

ஜனநாயகத்தின் அழிவும்.'மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்., படுதோல்வி அடையும் என செய்திகள் வருகையில், அப்படியே மாற்றி கூறுகிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கைஇந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு தாராளமாகப் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சியினருமே, 500 முதல், 1,000 ரூபாய் வரை பணப் பட்டுவாடா செய்துள்ளனர். எனவே, ஓட்டு எண்ணிக்கையை நடத்தக் கூடாது.
- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

'நீங்கள் சொல்வது சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக, ஓட்டு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என கூறுவது தவறு...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டிஎளிதான கேள்விகளுக்கு முதலில் விடை எழுத வேண்டும். அப்போது தான் ஒருவித நம்பிக்கை பிறக்கும்; பதற்றமின்றி கடினமான கேள்விகளை அடுத்து கையாள முடியும். இப்படித் தான், பொதுஅறிவுள்ள எவரும் பரிந்துரைப்பார். இதை விடுத்து, தலைகீழாக ஆலோசனை சொன்னால் அவர் யார்; அவர் தான் இந்தியாவின் பிரதமர்!
- தமிழக மார்க்சிஸ்ட் செய்தி தொடர்பாளர் அருணன்

'நீங்கள் எல்லாம் போராட, இளைஞர்களை கூப்பிடுகையில், எப்படி படிக்க வேண்டும், எப்படி தேர்வுகளை எழுத வேண்டும் என, அறிவுரை கூறும் பிரதமர் மோடியை கிண்டல் செய்கிறீர்களா...' என, சாடத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் செய்தி தொடர்பாளர் அருணன் பேட்டிஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடி, இந்தியா வளர்ந்துள்ளது என்கிறார். அவர் சொல்வது, இந்திய முதலாளிகளின் வளர்ச்சியை; நாட்டு மக்களின் வளர்ச்சியை அல்ல.
- இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா

'கம்யூ., தலைவர்களின் வளர்ச்சியை மனதில் வைத்து, இந்தியா வளர்ந்து விட்டது என மறதியாக சொல்லியிருப்பாரோ என, கிண்டலாக கூறத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா பேட்டிகேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை, பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர். இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறதாம். சூழலை அழிக்கும் சமூக விரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசும் இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.
- மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்

‛இதுபோன்ற செயல்களை கேரள அரசு செய்யாது; இரு மாநிலங்களிலும் உள்ள பணத்தாசை பிடித்த தனிநபர்கள் தான் செய்திருப்பர். எனினும், விசாரிக்கப்பட வேண்டியதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கைஏப்ரல் மாத தொடக்க விபரங்களின்படி, தங்களது மக்கள் தொகையில், அமெரிக்கா, 32 சதவீதம் பேருக்கும், பிரிட்டன், 47 சதவீதம் பேருக்கும் தடுப்பூசியின் முதல் சுற்றை போட்டுவிட்டன. ஆனால் இந்தியா, இப்போது வரை, வெறும், 5.2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி, மிகவும் பின்தங்கி உள்ளது.
- மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி

'இப்படி பின்தங்கி இருக்க வேண்டும் என்பது தானே, உங்கள் கட்சியின் விருப்பம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கைகொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், கோயம்பேடு சில்லரை வர்த்தகர்களை நசுக்கும் போக்கை கைவிட்டு, சுழற்சி முறையில் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய, அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலர் கோவிந்தராஜுலு

'கோயம்பேடு போன்ற மொத்த அங்காடிகள் தான், கொரோனா பரவலுக்கு காரணம் என அரசு கருதுகிறது. எனவே, அரசுக்கு ஒத்துழைப்பது தான் நல்லது...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலர் கோவிந்தராஜுலு அறிக்கைShare
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (46)

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  //"நீங்க சொல்றது உண்மையான்னு மே 2ல தெரிஞ்சுடுமே..."// காலைலே எந்திரிச்சதும் மப்பு ஏத்திக்கணும் இந்தம்மாவுக்கு.. இல்லைன்னா இப்படி தான் ஏடாகூடமா பேசும்.. கொளத்தூரில் ஆடீம்காகாரனுங்க வோட்டு போடவே வரல்லை// போட்டு என்ன மாறிடப்போகுதுன்னு தெரிஞ்சி தான்.. ஆனா ஈப்பீஸ் தொகுதியில ஈப்பீஸை தோக்கடிக்கணும்ன்னு எல்லாரும் வோட்டு போட்டு கொளுத்தியிருக்காங்க.. அதான் ட்ரூத்து ..

 • திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா

  கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டும் அவலம் பல காலமாக நடந்து வருகிறது... இந்தக்காமகாசன் பிணராய் விஜயன் கிட்ட பேசி நடவடிக்கை எடுக்கட்டும் பார்ப்போம்...

 • Suppan - Mumbai,இந்தியா

  யெச்சூரி அவர்களே இந்தியா பத்து கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுவிட்டது. மற்ற நாடுகளை விட பல படி மேல்.உங்களுக்குப் படியளக்கும் சீன இன்னும் மூன்று சதவீதத்தைத் தாண்டவில்லையாமே? உங்களை மாதிரி ஆட்கள்தானே "இது பாஜ க ஊசி", "கோவாக்ஸின் போடக்கூடாது" என்றெல்லாம் பிரச்சாரம் செய்தீர்கள்?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தூங்கினா பயம் தெரியாது என்ற தனது ரகசியத்தை காங்., - எம்.பி., ஜோதிமணி கூறலயா?...

 • vbs manian - hyderabad,இந்தியா

  பினராய் விஜயனுக்கு கமல் நெருங்கிய நண்பர். தமிழகத்தில் கொட்டப்படும் கழிவுகள் முல்லை பெரியார் பற்றி அவரிடம் பேசலாமே.

Advertisement