dinamalar telegram
Advertisement

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் தமிழிசை அனுமதி

Share
Tamil News
புதுச்சேரி : அனைத்து மதத்தினரின் வேண்டுகோளையேற்று புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பதாக கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சில கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளித்திருந்தனர்.கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து சமய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ராஜ்நிவாசில் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பூசி போட அனைத்து மதத்தினரும் ஒத்துழைக்க அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.முஸ்லீம் சமய தலைவர்கள் கூறும் போது, ரம்ஜான் பண்டிகை நோன்பு காலத்தில் இரவு 8 மணிக்கு தான் தொழுகை துவங்குவதால் வழிபாட்டு தலங்களுக்கான நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தினர்.இந்து சமய தலைவர்கள் கூறும் போது, சித்திரை மாத திருவிழாக்கள் வர உள்ளது.

ஏற்கனவே அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கோவில்களில் கடைபிடிக்கப்படுகின்றன. வழிபாட்டு தலங்களுக்கான நேரத்தை அதிகரிக்க கோரினர். கிறிஸ்தவ பங்கு தந்தைகளும் வழிபாடு நேரத்தை அதிகரிக்க வலியுறுத்தினர்.இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி அட்டவணை,விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்ட பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டி:கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க சமய தலைவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தடுப்பூசி திட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். அனைத்து மதத்தினரும் வழிப்பாட்டுதலங்கள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க கோரினர்.

இதையேற்று புதுச்சேரியில் உள்ள வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. வழிப்பாட்டு தலங்களில் கொரோனா கட்டுபாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பக்தர்களும் பாதுகாப்பு வழிமுறைகளோடு தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement