dinamalar telegram
Advertisement

மதுரை எய்ம்ஸ் கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்து ; இரு ஆண்டு இழுபறிக்குப் பின் முன்னேற்றம்

Share
Tamil News
மதுரை : 'இந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது,'' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.1264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணியை தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லை. பிரதான கட்டுமான பணிக்கான நிதியை ஜிக்காவிடம் (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை) மத்திய அரசு கோரி இருந்தது. இதில் நீடித்த இழுபறியால் இரு ஆண்டுகளாக பணிதுவங்கவில்லை.

இதற்கிடையே 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் மார்ச் மாதம் முடிவு வரை எந்த தகவலும் இல்லை.

கடன் ஒப்பந்தம் கையெழுத்து

இந்நிலையில் ஜப்பான், இந்தியா இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களைகோரினார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த ஒப்பந்த ஆவணம் கிடைத்தப் பிறகு தான், முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும்' என கூறியுள்ளது. இரு ஆண்டுகளாக எய்ம்ஸ் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டுபண்ணியது.

இதை பயன்படுத்தி சட்டசபை தேர்தலில் எதிர்கட்சிகள் பிரசார வியூகம் அமைத்தன. ஒற்றை செங்கலை எடுத்துக்கொண்டு உதயநிதி பிரசாரம் செய்தார். இச்சூழலில் கடன் ஒப்பந்தம்கையெழுத்தாகி இருப்பது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இனி மற்ற பணிகள்வேகமெடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • ஆரூர் ரங் -

  அதே மதுரையில் 5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் 650உயர் சிகிச்சைக்கான பகுதி👍👍 கட்டப்பட்டு 100 MBBS இடங்களும் அதிகரிப்பு. மாநிலத்தில் மத்திய உதவியுடன் ஒரே ஆண்டில் 11 புது மருத்துவக் கல்லூரிகள உருவாகியுள்ளன👌..அதனை தீய முக பாராட்டவில்லை. எய்ம்ஸ் மிகப்பெரும் திட்டம் சில ஆண்டுகள் பிடிக்கத்தான் பிடிக்கும்.

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  55% ஆடீம்கா அரசாங்கம் ஒழியட்டும் என்று ஜப்பானிய நிறுவனம் காத்துக் கொண்டிருந்ததாம்..

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  அதானி க்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் குத்தகைக்கு எடுப்பதற்கு 60000 கோடி ருபாய் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான SBI வங்கி கடன் கொடுக்கிறது. இந்தியாவில் அரசு ஆஸ்பத்திரி கட்டுவதற்கு ஜப்பானிடம் கடன் கேட்கிறது மத்திய அரசு. நாடு யாருக்காக செயல்படுகிறது... அதனிக்காகவா இல்லை பொது ஜனத்துக்காகவா ....

  • ஆரூர் ரங் - ,

   வங்கி கடன் கொடுப்பது வணிகம் 🤭 அன்னிய நிலக்கரி குறைந்த விலையில் இங்கு கிடைக்க உதவுவது உங்களுக்கு😶 எரிகிறது. சீனாவுக்குப் போட்டியாக இந்தியா வளருவது கம்யூனிஸ்ட்🤬 உண்டியல் குலுக்கி ஆட்களுக்கு எரிவது சகஜம்

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  ////ஒற்றை செங்கலை எடுத்துக்கொண்டு உதயநிதி பிரசாரம் செய்தார்./// அப்ப.... ஒத்த செங்கல்லை அவர் காட்டுனது உண்மைதானே? அந்த செங்க கல்லை காட்டி கேட்டதாலதான்... அவரை... வடநாட்டிலிருந்து வந்த இந்திக்காரங்க எல்லாரும் பொராண்டி எடுத்துட்டாங்க... வார்த்தைகளால்?

 • ஆரூர் ரங் -

  METRO ரயில் திட்டம் கூட ஜப்பானிய கடனுதவி பெற்றுத்தான் கட்டினர். அப்படி இருக்கும்போது இநத எய்ம்ஸ் க்கு கடனுதவி பெற்றால் என்ன தவறு? கோவிட் 😡பரவலால் இது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எத்தனையோ திட்டங்கள் தாமதமாகிறது . இதே 5 ஆண்டுகளில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களும் 600 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படுக்கை வசதி மருத்துவமனை கட்டிடங்களும் உருவாகி செயல்படும் செய்தி திருட்டு திமுக ஆட்களுக்கும் தெரியும்.

Advertisement