dinamalar telegram
Advertisement

கோரிக்கை! பைக் ரோமியோக்கள் ஆட்டத்திற்கு ....போலீசார் கடிவாளம் போடுவது எப்போது?

Share
Tamil News
திருவொற்றியூர் : சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை பதறவைக்கும், 'பைக்' ரோமியோக்களின், 'ரேஸ்' ஆட்டத்திற்கு, போக்குவரத்து காவல்துறை கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


@@சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, காமராஜர் நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், வாகனப் போக்குவரத்து எப்போதும் அதிகம் காணப்படும். இச்சாலைகளில், விடுமுறை தினங்களில், மாலை மற்றும் இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களுடன், சாலையில் தாறுமாறாக பறக்கும் இளசுகளால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிரள்கின்றனர். சட்டென அதிக சத்தத்துடன் செல்லும் இரு சக்கர வாகனங்களால், மித வேகத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் மிரண்டு, விபத்தில் சிக்குகின்றனர்.


மேலும் பல இடங்களில், இதுபோன்ற பைக்குகளில் வரும் மர்ம நபர்கள், வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினங்கள் மட்டுமின்றி, தினசரி, மாலை, இரவு நேரங்களில், முக்கிய சந்திப்புகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.மின்னல் வேகத்தில், அதிக சத்தத்துடன் சாலைகளில், தாறுமாறாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, கடுமையான அபராதம் விதிப்பதுடன், வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    காவல்துறை இவர்களை கவனித்தால் கெட்டுப்போன ஊடகத்துறை மூலமாக காவல்துறையை அசிங்கப்படுத்துவோர் தான் இந்த ரோமியோக்களின் பாதுகாவலர்கள்

  • Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா

    மாமூல் என்னாவது? வாகனம் பறிமுதல் செய்தால் எங்களுக்கு என்ன லாபம்?

  • Muga Kannadi - chennai,இந்தியா

    இது டியோ புல்லிங்கோ பண்ற ஸ்டண்ட். இவனுகளை பின்னி பெடல் எடுக்கணும். அப்ப தான் திருதுவானுங்க.

Advertisement