dinamalar telegram
Advertisement

சமூக இடைவெளி பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு சீல்... கலெக்டர் சந்திரசேகர சகாமுரி எச்சரிக்கை

Share
Tamil News
கடலுார் : கொரோனா தொற்று பரவுவதால், சமூக இடைவெளி பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடனான காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை விரைவுபடுத்த வேண்டும். தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களுக்கு தொற்று அறிகுறி தென்பட்டால் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

ஒரே பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்து தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.இதனை வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, காவல்துறை உட்பட சம்மந்தப்பட்ட துறையினர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும், கொரோனா பாதுகாப்பு மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் செயல்பட தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

முகக் கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் அபராத தொகை வசூலிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவணங்களுக்கு சீல் வைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், ஊராட்சிகள் திட்ட இயக்குனர் மகேந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    இழுத்து மூடவே அதிகாரிகள். பரப்புரைக்கு பந்தல் போட்டு குடுத்தவங்க.

Advertisement