dinamalar telegram
Advertisement

பரவுகிறது :மக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருகின்றனர்

Share
Tamil News
ராமநாதபுரம்: மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அச்சமின்றி, விதிமுறைகளை மீறி கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் முகக்கவசம் அணியாமல், வெளியே வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தினமும் 6 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது தினமும் 15 முதல் 25க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் ஒரு முதியவர் பலியாகியுள்ளார். தற்போது 110 பேரை கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் நோய் தொற்று பரவாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத நபர்களிடம் ரூ.200 சானிடைசர், கைகழுவசோப்பு இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை ரூ.7லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்குமேல் ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்கள், 60வயதிற்குமேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், ஓட்டல்கள், மார்க்கெட், சில சினிமா தியேட்டர்கள் ஆகிய பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி அலட்சியமாக திரிகின்றனர்.

இந்நிலை நீடித்தால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாதவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -----------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அவிங்களுக்கு என்ன கஷ்டமோ? இலவச ரேஷனெல்லாம் பொங்கலோட நிறுத்தியாச்சு. அவனவன் வேலை வெட்டி பாத்து வயத்தை கழுவணும். மாஸ்க் வாங்க காசு இருந்தாத்தானே... போலீசுக்கு அபராதம் வசூலிச்சாதான் சம்பளமே கிடைக்கும்.போலிருக்கு. நடத்துங்க... நடத்துங்க.

Advertisement