தமிழக - கேரள எல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த செமனாம்பதி அருகே தமிழக - கேரள மாநில எல்லையில், மருத்துவக் கழிவுகள் கொட்டிய, 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட செமனாம்பதி, தமிழக - கேரள மாநில எல்லையாக உள்ளது. இங்கு ரெட்டமடை பிரிவு என்ற பகுதியில், தனியார் தோட்டத்தில் இன்று (8ம் தேதி), மருத்துவ கழிவுகள் கொட்டியதாக, மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். இதில், வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டா நிலத்தில் நீண்ட குழிகள் தோண்டி, பல ஆண்டுகளாக மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி புதைக்கப்பட்டது தெரியவந்தது. நிலத்தின் உரிமையாளர் சாஜூ ஆன்டனி மீது வழக்குபதிவு செய்து, போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (25)
எங்கும் லஞ்சம் எதற்கும் லஞ்சம்
உரிமையாளர் கேரளாகாரர் போல் உள்ளது இதை தோண்டினால் பெரிய செய்திகள் இயற்க்கை வளம் அழியும் செய்தி கிடைக்கும் .
அந்த லாரிகைளைக் கைப்பற்றிய விவசாயிகள் அதை தீ வைத்துக்கொளுத்தினால் லாரி உரிமயாளர்களுக்கு அச்சம் வரும்....
விவசாயிகள்தான் லாரிகளை சிறை பிடித்தார்கள் என்றால் போலீசும் வருவாய் துறையும் எல்லை பாதுகாப்பு படை எல்லாம் என்ன செய்கிறார்கள் ? காசு வாங்கி கொண்டு தமிழகத்தை குப்பை கூடமாக மாற்றாமல் விட மாட்டார்கள் போலிருக்கே ? மாரு நாளே அந்த லாரிகள் எல்லாம் வெளியில் வந்து விடும், வாழ்க ஜனநாயகம்
மிகவும் கடுமையான தண்டனை கொடுக்காவிட்டால் இது போன்று அடிக்கடி நடக்கும். யாரும் பயப்படமாட்டார்கள். செய்வார்களா?