dinamalar telegram
Advertisement

அதிகரிக்கும் கொரோனா; இந்தியர்கள் நியூசிலாந்து வர தற்காலிக தடை

Share
வெலிங்கடன்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இங்கிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 2.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிவேகமாக பரவும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா 2வது அலையில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாடு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அபாயத்தை தடுப்பது குறித்து ஆராயப்பட்டு பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • ஆப்பு -

  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கத் தேவையான மூலப்.பொருள்கள் அமெரிக்கா, பிரிட்டனிலிருந்துதான் வரணும். அவங்க அவிங்களுக்குத் தேவைன்னு வெச்சுக்கிட்டு நமக்கு கொஞ்சமா தர்ராங்க. நம்ம ராஜ தந்திரம் எப்பிடின்னா வெளிநாடுகளுக்கு கொன்ஹ்சம் அனுப்பிட்டு நம்மளுக்கு நிறைய ஒதுக்கலாம்னு. Astra Zeneca ப்ளான் எப்பிடின்னா பணக்கார நாடுகளுக்கு வித்துட்டு லாபம்.பாக்கலாமுன்னு. பில் கேட்ஸ் கூட ஆஸ்ட்ரா ஜெனகாவில் பெரிய பங்குதாரர். அவருக்கு லாபம் வாணாமா? தவிர, நம்மகிட்டே பொருள வாங்கி உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி நாம நல்லவங்கோன்னு பேர் வாங்கினா, அவிங்க என்ன இளிச்ச வாயர்களா? அமெரிக்காவுல ஜூன் மாசத்துக்குள்ள எல்லோருக்கும் தடுப்பூசி போட்டுருவாங்களாம். அப்புறம் மீந்தா குடுப்பாங்க. நமக்கு 130 கோடி டோஸ் தேவை. கிடைப்பது டவுட்டுதான். இப்பவே சீரம் இன்ஸ்டியூட் தலைவர் அமெரிக்காவுலேருந்து சரியா சப்ளை வரதில்லைன்னு பொலம்புறாரு. கூடிய சீக்கிரம் எல்லா தடுப்பூசி ஏற்றுமதியும் கட்.

 • ஆப்பு -

  நியூசிலாந்து போறதெல்லாம் சொகுசு விமானக்காரங்களாலதான் முடியும். பொதுமக்களிடம் காசு எங்கே இருக்கு? அவிங்கதான் கவலைப் படணும்.

  • Raman - kottambatti

   அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை தல ... போட்டோவை மாதிரியே வடஇந்தியர்கள் கூட்டம் கூடமா போயி குமியிறாங்க எப்படி பணம் வருதுன்னு தெரியலை.. ஆங்கிலமும் தெரியலை.. இங்கு இருந்து தப்பிச்சி ஓடுனமாதிரி ஓடுறாங்க..

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இந்தியர்கள் சொந்த வீட்டைவிட்டே நகராமல் இருந்தால்தான் காரோணவை ஒழிக்கமுடியும்.

  • Raman - kottambatti,இந்தியா

   அப்புறம் நீ ஏன் அங்கே இருக்குறே? ஊருக்கு உபதேசம் என்றால் சங்கிகளுக்கு பிடிக்கும் போல.. அவன் நாடு அவன் கட்டுப்பாடு போடுறான்.. உடனே அதற்கு கருத்து.. நல்லவேளை காரணம் காங்கிரஸ் என்று சொல்லாமல் போனாய்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  கோபாலசாமி, செஞ்சோற்று கடனை இதுபோன்ற கருத்துக்கள் மூலம் தீர்ப்பது போற்ற தக்கதே.

 • Nesan - JB,மலேஷியா

  சுட்டி நாடு மட்டும் அல்ல தோழரே, மிகவும் கெட்டி நாடு ....

Advertisement