dinamalar telegram
Advertisement

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு தொற்று

Share
புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது. 9.10 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,66,862 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 91.67 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.29 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 7.04 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று (ஏப்.,07) ஒரே நாளில் 12,37,781 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 26 லட்சத்து 77 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உலக பாதிப்புஇன்று (ஏப்ரல் 8-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 36 லட்சத்து 98 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 01 ஆயிரத்து 130 பேர் பலியாகினர். 10 கோடியே 78 லட்சத்து 28 ஆயிரத்து 758 பேர் மீண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  கொரோனா பரவினாலும் பரவாயில்லை. அரசியல்வாதிகள் ஆசைப்படி தேர்தல் கூட்டங்களை நடத்தி மக்கள் எந்தவித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பும் இல்லாமல் நெரிசலில் பிரச்சாரம் செய்து தேர்தல் நடத்தி ஆச்சு. விளைவு கொறோனா பரவி விட்டது. தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து நடத்தினால் என்ன. இதை மத்திய அரசு அறிவித்தால் மோடி அரசு, அது, இது என விமர்சனம் செய்வார்கள். இப்போது கொரொனா கட்டுப்பாடு மீறி பரவி விட்டது. இதற்கும் மத்திய அரசையே சாடுவார்கள். மக்கள் பற்றி கவலை இல்லாமல் ஆட்சி பீடம் எற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். நீதிமன்றங்களும் இது பற்றி சிந்திக்கவில்லை. சபரிமலைக்கு, கள்ள உறவை நியாயப் படுத்த பொது நல வழக்கு தாக்கல் செய்த மனிதர்கள் இதைப் பற்றி சிந்திக்கவில்லை. எது முக்கியமோ அதை செய்ய மாட்டார்கள். நல்ல திட்டங்களை எதிர்த்து போராடுவார்கள், கோரிக்கை விடுவார்கள். மக்கள் நலன் கருதி எந்த விதமான செயல் பாடும் செய்ய மாட்டார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பு நடந்ததாக அந்நியன் விட்ட புரட்டுக்களை மேடை போட்டு பேசுவார்கள். ஆயிரக்கணக்கில் கண்முன்னே கொல்ல பரவிடும் நோய் பற்றிய விழப்புணர்வை மக்கள் நலன் கருதி பேச மாட்டார்கள். அதில் ஏதும் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்றால் மட்டுமே வாய் திறப்பார்கள். பாஜக வந்துடும் தமிழுக்கு ஆபத்து, மோடி ஒயிக, இந்தி வந்துடும், சமஸ்கிருதம் வந்துடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுவார்கள். கொரானா வந்துடும், மக்கள் இறப்பார்கள் என்று முன்னெச்சரிக்கை செய்ய மாட்டார்கள். இது தான் இவர்கள் திராவிஷ பகுத்தறிவு.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மக்கள் தொகை குறைந்தால் நல்லதுதானே? முகக்கவசம் அணிய யார் முன்வந்தார்கள்? அதன் பலன்தான் இப்போது. வைரஸை ஏமாற்றமுடியுமா?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  கேன்சர் ,மாரடைப்பு ,சுகர் போன்றவைகளால் தான் இந்தியாவில் பெரும்பாலும் இறக்கின்றனர் அவர்கள் உயிர் பிழைக்க என்ன வழி வச்சிருக்கீங்க ???

 • ஆப்பு -

  எல்லாப் புகழும் அந்தப் பரப்புரை பெரியவருக்கே...

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  தடுப்பூசி இந்தியா முதலிடம் . நோய் பரவல் அதிகம் இது எப்படி சாத்தியம்.

  • ஆப்பு - ,

   . நமக்கு தெரியலைன்னா ஒரே ஒரு காரணம்தான் இருக்கு. நேரு.

Advertisement