dinamalar telegram
Advertisement

ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்

Share
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர், ஓட்டளிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 20 பெண்கள்; 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 803 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், 145 பேர் என, மொத்தம், 3 லட்சத்து, 5,968 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில், நட்சத்திர வேட்பாளரான நாம் தமிழர் கட்சியின் சீமான், தி.மு.க., கே.பி.சங்கர், அ.தி.மு.க., கே.குப்பன், ம.நீ.ம., மோகன், அ.ம.மு.க., சவுந்திரபாண்டியன் உட்பட, 20 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆனால், திருவொற்றியூரில், எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டுகள் பதிவாகவில்லை, வெறும், 65 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாயின. இது கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி, 99 ஆயிரத்து, 789 ஆண்கள்; 99 ஆயிரத்து, 193 பெண்கள்; 14 மூன்றாம் பாலினத்தவர் என, 1 லட்சத்து, 98 ஆயிரத்து, 996 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக தெரிகிறது. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், ஓட்டுப்பதிவில், 66.17 சதவீதமும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பினும், ஓட்டு பதிவில், 64 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர், 9.65 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். இந்த தொகுதியில் மட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது மூன்றில் ஒரு பங்கினர், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் கவனித்து, ஓட்டு போடாதவர்களின் பெயர்களை அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கினால் தான், மறுமுறை ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வரும் என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, 67.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (67)

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இது போல் வோட்டு போடாதவர்கள் வாழ தகுதி அற்றவர்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து என்ன பிரயோசனம். ஒரு மனிதன் வோட்டு போடா வக்கில்லாதவனாக இருந்தால் அவனுக்கு குடும்ப கார்டு ஓசியில் அரிசி சக்கரை அரசு இலவசங்கள் அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஓசியில் யூனிபார்ம் செருப்பு பஸ் பாஸ் எந்த சலுகையும் கொடுக்க கூடாது. எல்லாவற்றையும் கேன்சல் பண்ண வேண்டும். அதே போல் மழை வெள்ளம் வந்தால் உதவி தொகைகளை கொடுக்க கூடாது. அப்போது தான் தெரியும் அவர்களுக்கு. ஓசியி பாட்டிலும் பிரியாணியும் தருகிறோம் மேலும் பணம் தருகிறோம் என்று சொன்னால் போதும் உடனே வரிசையில் நின்று விடுவார்கள். இன்று பாருங்கள் கும்பகோணத்தில் 200 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று ஏமாற்ற பேர்வழி தினகரன் செய்த வேலையை பார்த்தீர்களா. ரூபாய்க்கு ஆசை பட்டு வோட்டு கூட போகாமல் இருக்கின்றனர். இந்த மக்களை பற்றி நாம் தான் கவலை படுகிறோம் ஆனால் அவர்கள் நம்மை மதிப்பதில்லை.

 • R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா

  பெருவாரியான மக்கள் தங்கள் சொந்தவூரிலும் சென்னையிலும் வாக்காள அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் சொந்த ஊருக்கு வோட்டு போட சென்று விட்டார்கள்

 • Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்

  கொரோன காரணத்தால் வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஊருக்கு வர முடியாமல் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன் ஒரு முறை வந்து சென்றால் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்த படுகிறார். அவரால் வேலைக்கு செல்ல முடியாது. உள்ளூர் மக்கள் ஓட்டு அளிக்காததற்கு காரணம் இறந்தவர்கள் பெயரை நீக்காதது, ஊர் மாறி சென்றவர்கள் அட்டையை மாற்றுவதற்கு பதில் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது போன்ற டுப்ளிகேட் வாக்காளர்கள் தன் ஓட்டு சதவீத சரிவுக்கு காரணம். ஆனால் எப்போதும் சென்னை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப் படுகிறது.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  சீமான் நிக்கிறதுக்கு எதிர்ப்பா?

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  சீமான் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாருல்ல? அதான் காசு வாங்கி ஓட்டு போட்டுப் பழகினவங்க வரல்ல.

Advertisement