dinamalar telegram
Advertisement

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி

Share
புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை கடந்த மார்ச் 1-ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று (ஏப்.,8) காலை 2வது டோஸ் தடுப்பூசியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பதிவில், ‛என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன். வைரசை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும், https://www.cowin.gov.in/home தளத்தில் பதிவு செய்து, விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.' என பதிவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    எதை போட்டு கொண்டார்? கோவாக்ஸினா கோவிஷீல்டா ?

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    மிக்க நல்லது. அப்போ ஒளறினாங்களே மோடி முதலில் போட்டுட்டுக்கொண்டு அதனால் பாதிப்பு இல்லை என்று சொன்னால் தான் நாங்கள் போட்டுக்கொள்வோம் என்று பீலா விட்டார்களே அந்த சில்லறைகள் போட்டுக்கிட்டுச்சா இல்லையா?பப்பு சோனியா பசி ........உங்களைத்தான் கேட்கின்றேன்

    • ஆப்பு - ,

      @என்றும் இந்தியன்.அறிவுகொழுந்துன்னு நினைப்பு. மோடி என்ன மொத ஆளாவா தடுப்பூசி போட்டுக்கிட்டு முன்மாதிரியா இருந்தாரு. தனக்கு முன்னால் ஆயிரக்கணக்கில் களப்பணியாளர்களை களம் இறக்கிட்டு சேஃப்னு தெரிஞ்சதும் தானே போட்டுக்கிட்டாரு. அவுருக்கு முன்னாடியே நான் தடுப்பூசி போட்டுக் கொண்டாயிற்று.

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      அவரு போட்டுக்கிட்டது பைசர். 45 000 ஆர்டர் பண்ணினத்துல இதுவும் ஒன்னு.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மறுபுடியும் பார்ரா ‼️

  • மன்னிப்பு - Madurai,இந்தியா

    இந்த முறையாவது வீடியோ தெளிவா இருக்கா?இல்லை என்றால் அவை ஊசி போடவில்லை, அவர் ஊசி போடும் போது சிரிச்சாரு,ஊசியே போடவில்லைனு புலம்ப வேண்டாம். ஊசி இலவசமாகத்தானே போடுறாங்க? போட வேண்டியதுதானே? கொரானா ஆய்வுக்கு வந்தாலே கெட்ட வார்த்தையில் திட்டி விரட்டுர கூட்டம் தானே? அப்பறம் ஊசி போட வந்த என்ன செய்யும் அந்த கூட்டம்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • ஆப்பு -

    நாமெல்லாம் சேஃப். பரப்புரை கேக்க கூடுனவங்களுக்குத்தான் பாதிப்பு.

    • sankar - Nellai

      உங்கள் யாரையாவது போட்டுக்க வேண்டாம்னு தடுத்தார் - அப்ரசண்ட

Advertisement