dinamalar telegram
Advertisement

காரில் தனியாக சென்றாலும் முக கவசம் கட்டாயம்

Share
புதுடில்லி : 'காரில் தனியாக பயணிக்கும் நபரும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம்' என, டில்லி உயர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காரில் தனியாக செல்லும் நபரும், முக கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அவர்களின் மனுக்கள், நீதிபதி பிரதிபா சிங் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'சுகாதாரம் மாநில பட்டியலில் வரும். எனவே, இதில் டில்லி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.

பின், நீதிபதி பிரதிபா சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும், முக கவசம் அணிய வேண்டும்.கொரோனா வைரசால் நாம் பாதிப்படையாமல் இருக்க, நமக்கான பாதுகாப்பு கவசமாக, முக கவசம் உள்ளது. எனவே, காரில் தனியாக செல்லும் நபரும் முக கவசம் அணிய வேண்டும் என, டில்லி அரசு பிறப்பித்த உத்தரவில், எங்களால் தலையிட முடியாது. காரில் ஒருவர் இருந்தாலும், முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • ஆப்பு -

  ராத்திரி தூங்கும்போது கனவுல மாஸ்க் இல்லாம இருந்தீங்கன்னா 10000 ரூவாய் விதிக்கலாமான்னு கேசரிவால் ஆலோசிச்சிட்டிருக்காரு. மத்திய அரசும் 28 சதவீதம் gst குடுத்துட்ட ஆட்சேபனை இல்லைன்னு பேசுவதா கனவு கண்டேன்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  சிம்பைவிட்டு நன்றாக வாலை பிடிக்கிறார்கள்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அப்ப வீட்ல இருக்கும்போதும் ,முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வரும்.

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,சவுதி அரேபியா

  இதைத்தான் 'வச்சா குடும்பி, செரைச்சா மொட்டை' என்று சொல்வது... மற்ற எல்லா இடங்களிலும் கூடி கும்மியடிக்க விட்டுவிட்டு இப்பொழுது காரில் தனியாக போனாலும் முகக்கவசம் என்பது அவசியமற்றது... முதலில் அத்தியாவசியமற்ற முறையில் கூட்டம் சேருவதை தவிர்க்க முயலுங்கள்..கூட்டம் சேரும் இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்குங்கள்...

 • theruvasagan -

  சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுகிறவர்களுக்கு சாமானிய மக்கள் மேல எவ்வளவு கரிசனம். எவ்வளவு அக்கறை. ஹெல்மட் அணிவதோ முகக்கவசவம் அணிவதோ எதாக இருந்தாலும் சாதரண மக்களா விஷயத்தில் கண்டிப்பும் கறாரும்தான். ஆனா பிரபலங்கள் அரசியல் வியாதிகள் நோய் பாதுகாப்பு விதிமுறைகளை தாங்களும் பின்பற்றாமல் தங்களை சுற்றிவரும் கூட்டத்தையும் பின்பற்ற வற்புறுத்தாமல் எவ்வளவு அலட்சியமாக.நடந்து கொண்டாலும் தப்புன்னும் சொல்லாது. தடையும் போடாது. தண்டனையும் தராது.

Advertisement