dinamalar telegram
Advertisement

யார் இந்த மத்வி ஹித்மா? சத்தீஸ்கரில் தவிப்பு

Share
ராய்பூர் : சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த நக்சல்களின் தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் நக்சல் தலைவர் மத்வி ஹித்மா மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பிரச்னை அதிகமாக உள்ளது. இங்குள்ள பாஸ்டர் வனப் பகுதியில் சமீபத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் இப்பகுதியில் நக்சல்களின் தலைவராக செயல்படும் மத்வி ஹித்மா மீது அனைவரது கவனமும் திரும்பி உள்ளது.
பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினரால் தேடப்படும் நக்சல் பிரிவின் முக்கிய தலைவராக மத்வி ஹித்மா உள்ளார். ஆனால் அவர் எப்படி இருப்பார் அவரது வயது என்ன என்பதுகூட பாதுகாப்பு படையினருக்கு உறுதியாக தெரியாது. இவரது வயது 45 இருக்கலாம் என மதிப்பிடும் அதிகாரிகள் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த அவரது புகைப்படங்களை மட்டுமே கையில் வைத்துள்ளனர்.
அவற்றின் உதவியுடன் மத்வியை பிடிக்க முடியாததால் அவரது தலைக்கு மாநில அரசு 40 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. நக்சல்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும்போதெல்லாம் மத்வியை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் முடுக்கி விடுவர். இதன்படி தற்போது மீண்டும் மத்வி ஹித்மா பரபரப்பில் சிக்கியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதுக்குத்தான் நான் அடிக்கடி சொல்லும் ஒரே வார்த்தை "தவறு கண்டேன் சுட்டேன்" அதனால் தானே இவர்கள் இன்று வரி உயிரோடு இருக்கின்றார்கள் ???இல்லை கைது செய்தாலும் வழக்கு தொடரும் வாய்தா தொடரும் ஜாமீன் தொடரும் மக்கள் தொல்லையும் தொடரும் இவர்கள் உயிரோடு இருப்பதினால்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நக்சல் பாரிகளுக்கு ஆதரவளிக்கும் தேசத்துரோக பத்திரிக்கையாளர்கள் இருக்கும் வரையில், இப்படி நடந்துகொண்டுதான் இருக்கும்.

 • Subramanian Rajasekaran - SINGAPORE,சிங்கப்பூர்

  இதன் பின்னணியில் சீநா இருக்கிறது இந்தியாவை உள்ளடி மூலம் உருக்கொலைக்க அவர்கள் திட்டம் பொருள் உதவி ஆயுத உதவி செயகிறார்கள்

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  காட்டின் வளங்களை corporate நிறுவனங்களுக்கு அதானி , அம்பானி போன்றோருக்கு ஆளும் அரசுகள் கொடுக்கும்போது நக்சல்கள் உருவாவது இயற்கையான ஓன்று ...

 • Rajasekaran - Chennai,இந்தியா

  நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குட்பட்ட, தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய பகுதிகளெல்லாம் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் சாமான்ய மக்களை துல்லியமாக கணக்கெடுத்து அடையாளம் கண்டு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தங்களுக்கு அரசாங்க செலவில் அமைக்கப்படும் எளிமையான ஆனால் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நவீன கட்டமைப்புடன் கூடிய முகாம்களில் தங்க வைத்து, அந்த கால கெடுவுக்குள், நக்சல்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் (வனப் பிரதேசங்கள் ) முழுவதையும் நவீன ஆயுதங்களுடன் ராணுவப்பகுதியாக அறிவித்து, ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அத்தனை நக்சல் தீவிர வாதிகளும் ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சரணடைய வேண்டும் இல்லாவிடில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அனைத்து முறைகளிலும் எச்சரித்து விட்டு “ ஆபரேஷன் கிளியரன்ஸ் '' என்ற பெயரில் கருணை காட்டாது ஒழித்துக் காட்டினாள் தவிர இந்த பிரச்சினை முடிவுக்கு வராது இனி ஒரு ஜவான் உயிரைக்கூட இழக்க இந்திய அரசு அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டுடன் உறுதிப்படச் செயல் பட வேண்டும். சீனாவையும் பாகிஸ்தானையும் ஓட ஓட விரட்டிய இந்திய இராணுவத்தால் இந்த தீவிர வாதத்தை ஒழிக்க முடியாதா நக்சல்கள் இந்தியாவில் பிறந்தவர்களாயிருப்பினும் அந்நிய விரோத சக்திகளாகத்தான் அடையாளம் காணப்பட்டு பூண்டோடு அழிக்கப் படவேண்டும்

Advertisement