மஹா.,வில் மீண்டும் ஊரடங்கு; அம்பானி மகன் ஆவேசம்
புதுடில்லி : மஹாராஷ்டிராவில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால் அங்கு பகுதி நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன்மோல் அம்பானி 29, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் விபரம்: நடிகர்கள் இரவு நேரங்களில் 'ஷூட்டிங்' நடத்தலாம்; கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம்; அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள் ஊர்வலங்கள் நடத்தலாம். ஆனால் மக்களுடைய தொழில் வேலை அரசுக்கு அத்தியாவசியமாக இல்லை. இந்த 'அத்தியாவசியம் இல்லாத' தொழில்கள் வேலைகள் தான் நாட்டின் சமூகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (32)
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் பாசறைகள் ஒப்பாரி ஓயவில்லை.
முகக்கவசம் அணியாமல் விட்டது தப்பு. இதை யாவரும் கடை பிடித்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது.
இப்பாவது அரசுக்கு புத்தி வருமான்னு பார்க்கலாம் ... ஆனால் தனி மனித கட்டுப்பாடு கொரோனாவுக்கு எதிராக மிக முக்கியம்.
நூத்துல ஒரு வார்த்தை சின்னபையனா இருந்தாலும் சரியாத்தான்யா சொல்றாரு
பின்ன HAL இருக்கும்போது rafel ஐ தூக்கி கொடுத்தது இவர்களிடம் தானே அப்புறம் என்ன, அதை விடு REFEL திருட்டு வேலை என்ன விவகாரம் DEAL 54000 கோடி/ COMMISON 4.5 % அப்போ எங்கே பணம் போனதாம் ஒருவேளை இதற்க்கு தான் PM CARE தனி FUND , அதுவும் AUDIT செய்ய முடியாது என்கிற கணக்கு , இது தான் உங்கள் கணக்கோ
கொல்கத்தாவில் மாபெரும் ஊர்வலம் போகலாம் இதையும் சேர்த்துக்கோ கண்ணா
அரசியல்வாதி என்றால் அனைத்து கட்சியும்தான் தல
அம்பானிக்கு சொத்து வளர்ந்தது .. வந்தது எப்படி என்று மும்பை வாசிகளுக்கு நன்றாகவே தெரியும் .