dinamalar telegram
Advertisement

மதுரை சினிமா செய்திகள்

Share
Tamil News
'ஆரம்பிக்கலாங்களா': லோகேஷ் டுவீட்கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார், லோகேஷ் கனகராஜ். தேர்தல் வேலைகளில் கமல் பிஸியாக இருந்ததால், இதன் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. மேலும் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து லோகேஷ் மீண்டார். தற்போது தேர்தலும் முடிந்துவிட்டது. இந்நிலையில் கமலும், தானும் பிரசார வேனில் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ள லோகேஷ், 'ஆரம்பிக்கலாங்களா' என பதிவிட்டு, படப்பிடிப்பு துவங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, இப்படத்தில், தான் நடிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் மலையாள நடிகர் பஹத் பாசில். தமிழில் இவர் நடிக்கும், 3வது படம் இது. கதாநாயகியானார் பவித்ரா சின்னத்திரையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி, இப்போது தமிழில் கதாநாயகியாகி உள்ளார். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இவர் நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இப்படத்திற்கு, இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜீஷ் அசோக் இசையமைக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜையில், நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று, படக்குழுவை வாழ்த்தினார். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில் சதீஷும் ஹீரோவாகி உள்ளார். ஹிந்திக்கு 'நோ' சொன்ன சமந்தாதென்னிந்திய சினிமாவில் பிரபலமாகிவிட்டால், அடுத்து ஹிந்தியில் நடிக்கவே பெரும்பாலான நடிகையர் விரும்புவர். ஆனால், தன்னை தேடி வந்த ஹிந்தி வாய்ப்பை மறுத்துவிட்டார் சமந்தா. 2018ல் பவன் குமார் இயக்கத்தில், இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் யு-டர்ன். இதை இப்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். இதிலும், சமந்தாவையே நடிக்க கேட்டனர். ஆனால், ஏற்கனவே நடித்த படத்தில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறி மறுத்துவிட்டார். இதனால், வேறு ஒரு நடிகையை நடிக்க பேசி வருகின்றனர். உடல் விமர்சனம்: -அபிராமி பதிலடிபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அபிராமி, தற்போது சில படங்களில் நடிப்பதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இவரது உடல் அமைப்பை கிண்டல் செய்து, சமூக வலைதளத்தில் சிலர் கருத்து பதிவிட்டனர். இதற்கு, ''என் மார்பு பெரிதாக இருப்பதை பற்றி பலர் கருத்து சொல்கின்றனர். ஆமாம், எனக்கு பெரியது தான். காரணம் நான் ஒரு தென்னிந்திய பெண். ''எங்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்க முடியாது. என்னைப் பற்றி கருத்து சொல்லும் முன் உங்கள் தாயை பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள்,'' என பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி. ஜெய் பிறந்த நாள்: சிம்பு தந்த சர்ப்ரைஸ்சினிமாவில், 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நடிகர் ஜெய், 38வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் நடிகர் சிம்பு பங்கேற்று ஜெய்க்கு கேக் ஊட்டிவிட்டார். இதுகுறித்து, “முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்ததில் எனக்கான மகிழ்ச்சியை அளவிட முடியாதது. என் பிறந்த நாளை இன்னும் சிறப்பான நாளாக்கியதற்கு நன்றி,” என கூறியுள்ளார், ஜெய்.ஜெய் மீது கொண்ட பாசத்தால், தான் நடித்த, வேட்டை மன்னன் படத்தில் அவரை நடிக்க வைத்தார் சிம்பு. ஆனால் அந்தப்படம் கைவிடப்பட்டது.ஜார்ஜியா பறந்தார் விஜய்விஜயின், 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சமீபத்தில் பூஜை நடந்த நிலையில் தேர்தலுக்கு பின் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி, சைக்கிளில் வந்து ஓட்டளித்து, ஒரு பரபரப்பை ஏற்படுத்தி சென்ற நடிகர் விஜய், தேர்தல் முடிந்த கையோடு ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். இங்கு தான் விஜயின், 65வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக படக்குழுவினரும் அங்கு சென்றுள்ளனர். இரண்டு வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. அதையடுத்து, சென்னையிலும், பின்பு ரஷ்யா சென்றும் படமாக்க உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement